ஃப்ளிப்கார்ட், ஸ்விக்கி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை

ஃப்ளிப்கார்ட், ஸ்விக்கி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை

மாதிரிப் படம்

ஃப்ளிப்கார்ட் மற்றும் ஸ்விக்கி அலுவலகங்களில் இந்த வாரம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

  • Share this:
ஆன்லைன் வர்த்தகத்தில் வால்மார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஃப்ளிப்கார்ட் இந்திய அளவில் முன்னிலையில் இருந்துவருகிறது. உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் ஸ்விக்கி முன்னிலையில் இருந்துவருகிறது. இந்த நிலையில், அந்த நிறுவனங்களின் விற்பனையாளர்கள் மீது எழுந்த வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து நேற்று பெங்களூருவிலுள்ள ஸ்விக்கி மற்றும் இன்ஸ்டாகர்ட் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்டின் துணை நிறுவனமான இன்ஸ்டாகர்ட்டில் நடைபெற்ற சோதனை இன்று நிறைவடைந்துள்ளது.

வருமான வரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் குறைந்தபட்சம் 20 பேர் இந்தச் சோதனையில் ஈடுபட்டிருப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர். அவர்கள் விலைப்பட்டியல் குறித்த விவரங்களைத் தீவிரமாக சோதனை செய்துள்ளனர்.

இதுகுறித்து ஃப்ளிப்கார்ட் வெளியிட்ட அறிக்கையில், ‘வருமான வரித்துறைக்கு தேவையான அனைத்து விவரங்களும் வழங்கப்பட்டது. அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது’என்று தெரிவித்துள்ளது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: