இங்கிலாந்தை மையமாக வைத்து உலக அளவில் பிபிசி நிறுவனம் செய்திகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் இந்தி, தமிழ் உள்ளிட்ட சில மொழிகளில் தனது சேவையை வழங்கி வருகிறது. இதனிடையே குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடியை தொடர்புபடுத்தி ஆவணப்படம் ஒன்றை பிபிசி சமீபத்தில் வெளியிட்டது. நாடு முழுவதும் மிகப்பெரிய விவாதப் பொருளாக இது மாறிய நிலையில் ஆவணப் படத்தை மத்திய அரசு தடை செய்தது. என்றாலும் அதனை மொழியாக்கம் செய்து வெளியிட்டு வரும் எதிர்க்கட்சிகள் , பிரதமர் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தின.
இந்த நிலையில் டெல்லி கே.ஜி.மார்க் மற்றும் மும்பையில் உள்ள பிபிசி செய்தி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அலுவலகத்தில் உள்ள வரவு - செலவு ஆவணங்களை கைப்பற்றி சரிபார்க்கும் பணிகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆய்வு நடைபெற்று வருவதால் அலுவலகத்திற்கு ஊழியர்கள் யாரும் வர வேண்டாம் என நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு வாரம் வரை பணிக்கு வர வேண்டாம் என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BBC, Income Tax raid