Home /News /national /

பான் கார்டுடன் ஆதாரை இணைக்காத வரி செலுத்துபவர்களுக்கு அபராதம்- வருமான வரித்துறை

பான் கார்டுடன் ஆதாரை இணைக்காத வரி செலுத்துபவர்களுக்கு அபராதம்- வருமான வரித்துறை

Aadhaar and Pan

Aadhaar and Pan

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காத வரி செலுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

    பான் கார்டு என்பது அனைவரும் வாங்கியிருக்க வேண்டும் என்றாலும், வருமான வரி செலுத்துபவர்களுக்கு பான் கார்டு கட்டாயம். ஒருவர் கட்டும் வருமான வரி கணக்கிடப்படுவது பான் எண் அடிப்படையில்தான். அது அவருக்கான அக்கௌண்ட் நம்பர். காங்கிரஸ் ஆட்சியின் போது ஆதார் எண் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, நம்முடைய அனைத்து பயன்பாட்டிலும் அது தொடர்புடைய ஒன்றாக இருந்துவருகிறது. வங்கி எண்ணுடன் ஆதார் இணைப்பு, நம்முடைய மொபைல் எண்ணுடன் ஆதார் இணைப்பு என்று பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது அவசியமாக இருந்துவருகிறது.

    அந்த வகையில், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என்று மத்திய வருமான வரித்துறை நீண்ட காலமாக வலியுறுத்திவருகிறது. அதற்காக கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி காலக்கெடுவாக அறிவித்தது. பின்னர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதிவரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

    25 வயது இளம்பெண்ணை மணந்த 45 வயது நபருக்கு நேர்ந்த சோகம்!

    அப்போதும், பலர் பான் கார்டுடன் ஆதாரை இணைக்காமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருக்கும் வரி செலுத்தும் நபர்களுக்கு 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Aadhaar card, Income tax

    அடுத்த செய்தி