Home /News /national /

Union Budget 2022: வருமான வரி, கிரிப்டோகரன்சி, வீட்டு கடன் வட்டி... பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்ப்பது என்ன?

Union Budget 2022: வருமான வரி, கிரிப்டோகரன்சி, வீட்டு கடன் வட்டி... பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்ப்பது என்ன?

பட்ஜெட் 2022

பட்ஜெட் 2022

. 80சி மற்றும் 80டி ஆகியவற்றுக்கான அதிகபட்ச வரம்பு பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளநிலையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் இதற்கான உயர்வு குறித்த அறிவிப்பு இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    2022ம் ஆண்டுக்கான 17வது நாடாளுமன்ற அவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலம் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது.  பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் இடம்பெறும் என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    வருமான வரி விலக்கு உச்சவரம்பு:

    கடந்த சில ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாதச் சம்பளதாரர்களிடையே எழுந்துள்ளது. கடைசியாக கடந்த 2017-18ல் வருமான வரி விலக்கிற்கான அடிப்படை வரம்பு மாற்றப்பட்டது. எனவே, 2022ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்த அடிப்படை வரம்பு மீண்டும் மாற்றி அமைக்கப்படுமா என மிடில்கிளாஸ் மக்கள் இடையே எதிர்ப்பார்ப்பு அதிகமாக உள்ளது. 30 சதவீதம் வரி விதிப்புக்கான  வரம்பை 20 லட்சத்திற்கு மேலாக உயர்த்த வேண்டும் என்றும் எதிர்பார்ப்பும் உள்ளது.

    கிரிப்டோகரன்சி வரி

    கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிரிப்டோகரன்சி முதலீடு தொடர்பாக வரன்முறையை ஏற்படுத்த கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணய கட்டுபாடு மசோதா 2021 (The Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill, 2021) என்ற  மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், 2022 பட்ஜெட்டில் கிரிப்டோகரன்சிக்கான வரி தொடர்பான தெளிவுகள் கிடைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  கிரிப்டோகரன்சியின் வகைப்பாடு, ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுமா, வரி விகிதம் என்ன போன்ற கேள்விக்கு விடையாக பட்ஜெட் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    வீட்டில் இருந்து பணியாற்றுவோருக்கான விலக்கு:

    2022 பட்ஜெட்டில் வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கான கொடுப்பனவிற்கு (allowance) வரி விலக்கு அறிமுகப்படுத்தப்படலாம்.  இத்தனைய செலவுகளுக்கு விலக்கு அளிப்பது நிகர ஊதியத்தில் உயர்வை ஏற்படுத்தும். இதன் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவை அதிகரிக்கும்.

    80சி பிரிவு  வரம்பு உயர்த்தப்படலாம்


    80சி பிரிவில் 80CCC, 80CCD (1), 80CCD (1b) மற்றும் 80CCD (2) போன்ற உட்பிரிவுகளும் உள்ளன. அவை, சரியான முதலீடுகள் மற்றும் தகுதியான செலவுகள் மூலம் வரி செலுத்துவோருக்கு அவர்களின் வரிச்சுமையை குறைக்க உதவும். 80சி மற்றும் 80டி ஆகியவற்றுக்கான அதிகபட்ச வரம்பு பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளநிலையில், இந்த ஆண்டு அதில் உயர்வு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


    இதையும் படிங்க: மத்திய பட்ஜெட் 2022: உயருமா வருமான வரி விலக்கு உச்சவரம்பு? மாதச் சம்பளதாரர்கள் எதிர்பார்ப்பு!!


    மேலும், கொரோனாவால் பாதித்தவர்களுக்கு வரி சுமையை குறைக்கும் வகையில் 80டி மற்றும் 80டிடிபி ஆகிய பிரிவுகளில்  கொரோனா  செலவீன தொடர்பான விலக்கு அளிக்கப்படலாம் .


    ஐடிஆர் தாக்கல் செய்யும் முறையில் எளிமை


    தற்போதைய சூழலில் வரு செலுத்துபவர்கள் வருமான வரி அறிக்கை (ITR) தாக்கல் செய்வதில் பல்வேறு இடர்பாடுகள் உள்ளன. குறிப்பாக, மாத சம்பளம், வட்டி தவிர்த்து பிற வருமானம் பெறும் வரி செலுத்துவர்கள் ஐடிஆர் தாக்கல் செய்வதில் கடினம் உள்ளது. பல்வேறு உறுதிபடுத்துதல் தேவைப்படுகின்றன. அனைத்தையும் பூர்த்தி செய்து சமர்ப்பித்தாலும் சில நேரங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுகின்றன. எனவே, ஐடிஆர் தாக்கல் செய்யும் முறையை எளிமைப்படுத்துவது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    Published by:Murugesh M
    First published:

    Tags: Home Loan, Income tax, Union Budget 2022

    அடுத்த செய்தி