ஹோம் /நியூஸ் /இந்தியா /

கை, கால்களில் விலங்கு, இருட்டு அறை... 36 ஆண்டுகள் மகளை வீட்டில் சிறையில் வைத்த தந்தை! - அதிர்ச்சி சம்பவம்!

கை, கால்களில் விலங்கு, இருட்டு அறை... 36 ஆண்டுகள் மகளை வீட்டில் சிறையில் வைத்த தந்தை! - அதிர்ச்சி சம்பவம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பெண்ணின் 17 வயதில் வீட்டில் உள்ள ஓர் இருட்டு அறையில் விலங்குகள் போட்டு அவரது தந்தை கிரீஷ் அடைத்து வைத்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Uttar Pradesh, India

  மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கை, கால்களில் விலங்கிட்டு வீட்டில் வெளிச்சம் வராத இருட்டு அறையில்  36 ஆண்டுகள் அடைத்து வைத்த அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

  உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள முகமதாபாத் என்ற கிராமத்தில் வசிப்பவர் கிரீஷ் சந்த். இவருக்கு 53 வயதில் ஸ்வப்னா ஜெயின் என்ற மகள் உள்ளார்.

  மனநலம் குன்றிய குழந்தையாக பிறந்த ஸ்வப்னாவை அவரது தந்தை 17 வயதில் இருந்தே வீட்டை விட்டு வெளியே அனுப்பியதில்லை. மேலும் அந்தப் பெண்ணின் 17 வயதில் வீட்டில் உள்ள ஒரு இருட்டு அறையில் கைகால்களில் விலங்குகள் போட்டு அடைத்து வைத்துள்ளார். அன்று தொடங்கி சுமார் 36 ஆண்டுகள் சூரிய ஒளி கூட வராத இருட்டு அறையில் ஸ்வப்னா நரக வாழ்க்கை அனுபவித்து வந்துள்ளார்.

  இத்தனை ஆண்டுகளாக ஸ்வப்பானவுக்கு உணவை ஜன்னல் வழியாக மட்டும் தந்து, அறையை விட்டு வெளியே வரவிடாமல் அடைத்து வைத்துள்ளனர் அவரது குடும்பத்தினர். ஸ்வப்னாவின் தந்தை கிரீஷ் அண்மையில் உயிரிழந்த நிலையில், பெண்ணின் துயரக் கதை அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சேவா பாரதிக்கு தெரியவந்துள்ளது. அவர் பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ அஞ்சுலா மாகவுர் என்பவரை தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளார்.

  இதையும் படிங்க: மொத்த ஊருக்குமே சோலார் பவர்! நாட்டின் முதல் சோலார் கிராமம்! பிரதமர் அறிவித்த குஜராத் வில்லேஜ்!

  பின்னர் எம்.எல்.ஏ-வின் முயற்சியால் வீட்டிற்கு சென்று ஸ்வப்னாவை 36 ஆண்டுகள் கழித்து வீட்டுச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கந்தல் துணியில் மிக மோசமான நிலையில் இருந்த ஸ்வப்னாவை சுத்தம் செய்த சமூக ஆர்வலர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இனி வரும் காலத்தில் இவர்களே ஸ்வப்னா பார்த்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Mental Health, Uttar pradesh, Woman