கல்லூரி முதல்வர் புகார்: உத்தரப் பிரதேசத்தில் கல்லூரி மாணவர்கள் மீது தேசவிரோத வழக்கு

கல்லூரி முதல்வர் புகார்: உத்தரப் பிரதேசத்தில் கல்லூரி மாணவர்கள் மீது தேசவிரோத வழக்கு

பிரதிநிதித்துவப் படம்.

மாணவர்கள் தேசவிரோத கோஷங்களை எழுப்பியதாகக் கல்லூரி முதல்வரே புகார் அளித்ததன் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 • Share this:
  உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியா மாவட்டத்தில் சாக்கே டிகிரி அரசுக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட 6 பேர் மீது தேசவிரோத வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

  மாணவர்கள் தேசவிரோத கோஷங்களை எழுப்பியதாகக் கல்லூரி முதல்வரே புகார் அளித்ததன் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  இது தொடர்பாக கல்லூரி முதல்வர் பாண்டே, “நாகரீகமற்ற, தேச விரோத கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. கல்லூரி வளாகங்களில் இதெல்லாம் நன்றாகவா இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.

  மேலும் அவர், ராமஜென்மபூமி இடம் அருகில் இருக்கும் வேளையில் டெல்லி ஜே.என்.யு. பல்கலைக் கழகத்தில் எழுப்பப்படும் கோஷங்களை நான் எப்படி இங்கு அனுமதிக்க முடியும்? என்று சாடினார்.

  ஆனால் மாணவர்கள் தரப்பிலோ ஏன் மாணவர் தேர்தல் நடத்தவில்லை என்று கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

  1991-ல் ஆரம்பித்த சாகெட் கல்லூரியில் சுமார் 10,000 மாணவர்கள் பயில்கின்றனர்.

  இந்நிலையில் சுமித் திவாரி, ஷேஷ் நாராயண் பாண்டே, இம்ரான் ஹாஷ்மி, சாத்விக் பாண்டே, மோஹித் யாதவ், மனோஜ் மிஸ்ரா ஆகியோர் மீது தேசவிரோத வழக்குப் பதியப்பட்டுள்ளது.

  அயோத்தியா காவல்நிலைய அதிகாரிகள் இவர்கள் மீதான புகார்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

  போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

  கல்லூரி முதல்வர் கொடுத்த புகாரில், “டிசம்பர் 7 முதல் அட்மிஷன் உள்ளிட்ட நடைமுறைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சில வெளியாட்களும், சமூக விரோதிகளும் கல்லூரிக்குள் புகுந்து மாணவர் தேர்தல் நடத்த ஆர்ப்பாட்டம் செய்தனர். டிசம்பர் 16ம் தேதியன்று கல்லூரியின் மெயின் கேட்டைப் பூட்டிவிட்டு, ஆசிரியர்களை மரியாதைக் குறைவாகப் பேசினர்.

  வகுப்புகளை இடையூறு செய்தனர், தேச விரோத கோஷங்களை எழுப்பினர்.

  ஆனால் முன்னாள் மாணவர் தலைவர் கிருஷ்ணா யாதவ் ஆங்கில ஊடகம் ஒன்றிற்குக் கூறும்போது, “முதல்வரிடமிருந்தும் புராக்டரிடமிருந்துதான் விடுதலை வேண்டும் என்று கோஷமிட்டனர். இதை தேச விரோதம் என்று அவர் திரிக்கிறார்.

  கடந்த ஆண்டு ராமர் கோயில் விவகாரம் காரணமாக தேர்தல் இல்லை என்றார்கள், நாங்கள் சரி என்றுதான் போனோம். வகுப்புகள் நடக்கும் போது ஏன் மாணவர் தேர்தல் நடக்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பினார்.
  Published by:Muthukumar
  First published: