மேற்குவங்க தேர்தல் 2021: ஒரே தொகுதில் மல்லுக்கட்டும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள்!

மேற்குவங்க தேர்தல் 2021: ஒரே தொகுதில் மல்லுக்கட்டும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள்!

மேற்குவங்க தேர்தல் 2021: ஒரே தொகுதில் மல்லுக்கட்டும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள்!

2019-ல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் விருப்ப ஓய்வு பெற்றுவிட்டு பாஜகவில் இணைந்தார் பாரதி கோஷ்.

  • Share this:
பணி ஓய்வு பெற்றுவிட்டு அரசியலில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் இருவர் ஒரே தொகுதியில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிட உள்ளதால் மேற்குவங்கத்தின் தெப்ரா நட்சத்திர தொகுதிக்கான அந்தஸ்தை பெற்றுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த முன்னாள் ஐபிஎல் அதிகாரி ஹுமாயுன் கபீர் போட்டியிடும் தெப்ரா தொகுதியில் பாஜக சார்பில் பாரதி கோஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரும் விருப்ப பணி ஓய்வு பெற்ற ஐபிஎல் அதிகாரியாவார்.

சந்தாநகர் காவல் ஆணையராக இருந்த ஹுமாயுன் கபீர் கடந்த மாதம் விருப்ப ஓய்வு பெற்றுவிட்டு மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கபீரை கொல்கத்தாவில் இருந்து 10 கிமீ தொலைவில் இருக்கும் தெப்ரா தொகுதியின் வேட்பாளராக நேற்று திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்தது.

இவர் ஓய்வு பெறும் நாளில் சந்தாநகரில் முன்னாள் அமைச்சரும், பாஜகவின் நந்திகிராம் தொகுதி வேட்பாளருமான சுவேந்து அதிகாரி தலைமையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் ‘அவர்களை சுட்டுத்தள்ளுங்கள்’ என கோஷமிட்ட 3 பாஜக தொண்டர்களை கைது செய்து அதிரடி காட்டினார்.

கபீரை எதிர்த்து தெப்ரா தொகுதியில் களமிறங்கியிருக்கும் பாஜக வேட்பாளரான பாரதி கோஷ்-ம் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவர் அண்டை மாவட்டமான ஜக்ராம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தவர். ஒரு காலத்தில் மமதா பானர்ஜிக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர். பொது நிகழ்ச்சி ஒன்றில் மமதா பானர்ஜி எனக்கு தாய் போன்றவர் என கூறினார்.

2019-ல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் விருப்ப ஓய்வு பெற்றுவிட்டு பாஜகவில் இணைந்தார் பாரதி கோஷ். மேற்குவங்க தேர்தலுக்காக பாஜக அறிவித்த 57 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் பாரதி கோஷ் தெப்ரா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Published by:Arun
First published: