• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கொரோனா காலத்தில் Tap and Go பணப் பரிவர்த்தனைகள்: ரிசர்வ் வங்கி ஒப்புதல்..!

கொரோனா காலத்தில் Tap and Go பணப் பரிவர்த்தனைகள்: ரிசர்வ் வங்கி ஒப்புதல்..!

கோப்பு படம்

கோப்பு படம்

இந்த தொழில்நுட்பம் மூலம் கடைகளில் இருக்கும் POS (Point of service machine) சாதனத்தில் நம்மால் தொடுதல் இல்லாமல் பணம் செலுத்த முடியும்.

  • Share this:
    மத்திய ரிசர்வ் வங்கி கார்டு மூலமாகத் தொடுதல் இல்லாமல் பணம் செலுத்தப் பயன்படும் 'Tap and Go' தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்த தனது ஒப்புதலை வழங்கியுள்ளது .

    இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு உடையவர்களின் மொத்த எண்ணிக்கை 26000-ஐக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புகள் தீவிரமாகப் பரவி வருகிறது. இதையடுத்து உலக நாடுகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் நீடித்த ஊரடங்கு அமலில் உள்ளது.

    கொரோனா ட்ராப்லெட் தொற்று காரணமாகப் பரவும் என்பதால் மக்கள் பெரும்பாலும் பணத்தை UPI ஆப்கள் மூலமே செலுத்தி வருகின்றனர். சிலர் டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் மூலமாகவும் பணம் செலுத்தி வருகின்றனர்.  சில புதிய கார்டுகள் மூலமாக மட்டுமே ரகசிய எண்ணைப் பதிவிடாமல் பணம் செலுத்த முடியும். இப்போது மத்திய ரிசர்வ் வங்கி கார்டு மூலமாகத் தொடுதல் இல்லாமல் பணம் செலுத்தப் பயன்படும் 'Tap and Go' தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்த தனது ஒப்புதலை வழங்கியுள்ளது .

    குறிப்பிட்ட இந்த 'Tap and Go' வசதி, VISA, MasterCard, NPCI கார்ட் போன்ற கார்டுகளில் இருக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 2000 ரூபாய்க்கு குறைவாகப் பொருட்களை வாங்கியிருந்தால் கார்டை Tap செய்தால் போதும். மேலும் ரகசிய எண் போன்ற எதையும் கேட்காது.

    இரண்டாயிரத்துக்கும் அதிகமாகப் பணம் செலுத்த வேண்டும் என்றால் 'Two factor authentication' முறையில் ரகசிய எண் அல்லது OTP எண்ணையும் பதிவு செய்ய வேண்டி வரும்.

    'Tap and Go' வசதியானது RFID - Radio Frequency Identification Technology என்னும் தொழில்நுட்பம் மூலம் இயங்குகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் கடைகளில் இருக்கும் POS (Point of service machine) சாதனத்தில் தொடுதல் இல்லாமல் பணம் செலுத்த முடியும். இந்த தொழில்நுட்பம், இனிமேல்தான் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பதால் இதை உடனடியாக நம்மால் அனைத்து கடைகளிலும் எதிர்பார்க்க முடியாது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Gunavathy
    First published: