உத்தரப் பிரதேச மாநிலத்தில் இயங்கும் ஒரு ஷாப்பிங் மாலில் ஏழைகள் தங்களுக்கு தேவையான துணிகளை இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்ற ஆச்சரியமான வழக்கத்தை வைத்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் அனோகா மால் என்க ஷாப்பிங் மால் இயங்கி வருகிறது. இந்த ஷாப்பிங் மாலில், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாநிலங்களில் ஏழைகள் தங்களுக்கு தேவையான துணிகள் மற்றும் பொருள்களை வந்து இலவசமாக எடுத்து செல்லலாம் என்ற வழக்கத்தை 5 ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகின்றனர். பொதுவாக வட மாநிலங்களில் குளிர்காலம் மிக தீவிரமாக இருக்கும் என்ற நிலையில், உரிய உறைவிடம் உடைகள் இல்லாமல் ஏழை மக்கள் சிரமப்படுகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு இந்த அனோகா மாலின் உரிமையாளர்கள், குளிர் அதிகம் இருக்கும் 3 மாதங்களில் ஏழை மக்கள் மாலுக்குள் நுழைந்து தேவையான உடைகள், துணிகளை எடுத்துக்கொண்டு செல்லலாம் என்ற புதிய முயற்சியை 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி ஆண்டு தோறும் நடத்தி வருகின்றனர்.
மேலும், ஏழைகளுக்கு நன்கொடை வழங்க விரும்புபவர்கள் பொருள்களை வாங்கி இந்த மாலில் வைத்து விட்டு செல்லும் வசதியும் உண்டு. அதேவேளை, அவை பயன்படுத்தக்கூடிய தரத்தில் உள்ளதா என்பதை பரிசோதித்த பின்னரே மால் ஊழியர்கள் அதை வாங்கிக்கொள்கின்றனர். பெரும்பாலும் பல மருத்துவர்கள் இங்கு நன்கொடை வழங்குவதாக ஷாப்பிங் மாலை இயக்கும் அகமது ராசா கான் கூறுகின்றார்.
இதையும் படிங்க: செஸ் செட்டை அடுக்கி வைத்து பெண் உலக சாதனை..! எத்தனை நொடிகளில் தெரியுமா?
ரிக்ஷா இழுப்பவர்கள், கூலித் தொழிலாளர்கள் போன்ற எளிய மக்கள் இங்கு வந்து பயன்பெறுகிறார்கள் என்று கூறும் அவர், அவர்கள் யாரிடமும் யாசகம் கேட்க வேண்டியதில்லை. தேவையானதை எடுத்துச் செல்லலாம் என்றார். கடந்தாண்டு சுமார் 3,000இல் இருந்து 4,000 பேர் தங்களுக்கு தேவையான துணியை மாலில் இருந்து எடுத்து சென்றார்கள் என கான் தெரிவித்தார். இந்த ஷாப்பிங் மாலின் புதிய முயற்சியை பலரும் பாராட்டி வரவேற்று வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Shopping malls, Uttar pradesh