கேரளாவில் கொட்டி தீர்க்கும் மழை: 8 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கேரளாவில் கொட்டி தீர்க்கும் மழை: 8 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வெள்ளத்தில் மூழ்கியுள்ள கார்
  • News18
  • Last Updated: August 13, 2018, 4:27 PM IST
  • Share this:
கேரளாவில் மழை நீடித்து வரும் நிலையில், 8 மாவட்டங்களுக்கு கடும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

தென் மேற்கு பருவமழை நீடித்து வரும் நிலையில், கேரளாவில் உள்ள வயநாடு, இடுக்கி, ஆழப்புலா, கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணையிலிருக்கும் 5 மதகுகளிலிருந்தும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் பெரியார் நதி ஓரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்டோரை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்டுள்ள போதிலும், மழை, நிலச்சரிவு காரணமாக 29 பேர் உயிரிழந்தனர். 54 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப்படையினருடன் இணைந்து முப்படையினரும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, முதலமைச்சரை தொடர்பு கொண்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அரசு சார்பில் தேவையான உதவிகள் செய்யப்படும் என்றார். மேலும், ராஜ்நாத் சிங் நாளை கேரளா சென்று வெள்ளப் பாதிப்புகளை பார்வையிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொச்சி விமான நிலையத்தில், விமான சேவை தொடங்கியுள்ளது.


இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் பினராயி விஜயன், ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
First published: August 11, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading