Home /News /national /

இந்தியாவில் புதிதாக 5,554 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத் துறை அறிவிப்பு!

இந்தியாவில் புதிதாக 5,554 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத் துறை அறிவிப்பு!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்றுக்கு 5,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார துறை அறிவிதுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்றுக்கு 5,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொற்றினால் பாதிக்கப்பட்டு 18 பேர் இறந்துள்ளனர் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்பநல துறை தெரிவித்துள்ளது.

    இன்றைய நிலவரப் படி மொத்தமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,44,90,283 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 6322 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனுடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,39,13,294 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,28,139 ஆக உள்ளது.

    கொரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் இலவசமாக கொரோனா தடுப்பு ஊசி மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தினசரி பாதிப்பு அளவு 1.47 சதவீதமாக இருக்கிறது. இதனையடுத்து தற்போது நாடு முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியும் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

    Also Read : விநாயகர் சிலை கரைக்கும் போது விபரீதம் - ஹரியானாவில் 7 பேர் நீரில் மூழ்கி பலி

    நாடு முழுவதும் 214.77 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 21,63,811 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என்று தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: Corona, Corona death, Corona positive, Covid-19 vaccine

    அடுத்த செய்தி