• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மேற்குவங்க மாநிலத்தில் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு : நீண்டவரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களிப்பு

மேற்குவங்க மாநிலத்தில் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு : நீண்டவரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களிப்பு

வாக்காளர்கள்

வாக்காளர்கள்

294 தொகுதிகள் கொண்ட மேற்குவங்க மாநில சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகின்றன. 6 கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி நடந்து வருகின்றது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

  • Share this:
    294 தொகுதிகள் கொண்ட மேற்குவங்க மாநில சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகின்றன. 6 கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி நடந்து வருகின்றது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    மேற்கு வங்காள சட்டசபைக்கு கடந்த மார்ச் 27 ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. ஏப்ரல் 22 ஆம் தேதி 6ஆம் கட்ட தேர்தல் முடிந்தது. அதன் மூலம் 223 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துள்ளது. இன்று 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

    இன்று, மால்டா, கொல்கத்தா தெற்கு, முர்ஷிதாபாத், மேற்கு பர்தமான், தெற்கு தினாஜ்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 34 தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடக்கிறது.

    இன்றைய தேர்தல் களத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என 268 பேர் களம் காண்கின்றனர். இதில் 37 பேர் பெண்கள் ஆவர். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக சார்பில் 34 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். காங்கிரஸ்-இடதுசாரிகள் இணைந்த கூட்டணியில் காங்கிரஸ் 18 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 12 இடங்களிலும், ஐஎஸ்எப் 4 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இன்றைய மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 81.88 லட்சம் ஆகும். இதற்காக 11,376 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேற்குவங்க சட்டசபை களத்தில் தொடக்கம் முதலே மிகுந்த பரபரப்பும் பதற்றமும் நிலவி வந்த நிலையில், கொரோனா 2ஆவது அலை, தேர்தல் பிரச்சாரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் கடந்த சில நாட்களாக தேர்தல் களம் மந்தமாகவே காண்ப்பட்டது. வாக்குப்பதிவுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. வன்முறை, மோதல் சம்பவங்களை தடுக்க துணை ராணுவம் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை 7 மணிக்கு 7ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து நீண் வரிசையில் நின்று உற்சாகமாக வாக்களித்து வருகின்றர்.

    Must Read :  ஆக்சிஜன் ஏற்றி வரும் கப்பல்களுக்கு கட்டண தள்ளுபடி: துறைமுகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

     

    இந்நிலையில், சம்சேர்கஞ்ச், ஜாங்கிப்பூர் ஆகிய 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் மரணமடைந்ததால், அந்த தொகுதிகளுக்கான தேர்தல் மே16 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பட்டுள்ளது என்பது குற்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: