தெலங்கானாவில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை மீட்பதற்காக சென்ற அதிகாரிகளுக்கு நடந்த கொடுமை

தெலங்கானாவில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை மீட்பதற்காக சென்ற அதிகாரிகளுக்கு நடந்த கொடுமை

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கச்சென்ற அதிகாரிக்கு நிகழ்ந்த கொடுமை

கிராமத்தினர் ஆக்கிரமிப்பு செய்த வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை மீட்பதற்காக சென்ற அதிகாரிகளை பொது மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்தனர்.

 • Share this:
  தெலங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டத்திலுள்ள சிந்தகுப்பா கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் அந்தப்பகுதியில் வனத்துறைக்கு சொந்தமாக இருக்கும் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். இந்தநிலையில் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்த வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை மீட்பதற்காக வனத்துறையை சேர்ந்த அதிகாரிகள் மூன்று பேர் அங்கு சென்றனர்.

  அதிகாரிகள் மூன்று பேரும் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை மீட்பதற்காக அளந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த கிராமத்தினர், அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
  இந்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் மூன்று பேரையும் அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து கிராமத்தினர் தாக்கினர்.

  இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று வனத்துறை அதிகாரிகள் மூன்று பேரையும் மீட்டு சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்தனர். தாக்குதலுக்கு உள்ளான வனத்துறை அதிகாரிகள் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் அவர்களை தாக்கிய பொதுமக்களை கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

  மேலும் படிக்க...தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்ற சுஷில் சந்திரா

  வனத்துறை அதிகாரிகள் மூன்றுபேரை பொது மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: