முகப்பு /செய்தி /இந்தியா / Watch | மண்டபமாக மாறிய மருத்துவமனை... பெண்ணை கரம்பிடித்த இளைஞர்.. நெகிழ்ச்சி வீடியோ..!

Watch | மண்டபமாக மாறிய மருத்துவமனை... பெண்ணை கரம்பிடித்த இளைஞர்.. நெகிழ்ச்சி வீடியோ..!

மருத்துவமனையில் திருமண தம்பதி

மருத்துவமனையில் திருமண தம்பதி

எதிர்பாராத விதமாக திருமணத்திற்கு முதல் நாள் அன்று மணப்பெண் விபத்தில் சிக்கினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Telangana, India

தெலங்கானா மாநிலத்தில் மணமகன் ஒருவர் மணப்பெண்ணின் உடல்நிலை சூழலை கருத்தில் கொண்டு மருத்துவமனையில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஜெயசங்கர் புபால்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. இவருக்கு மஞ்சிராலா மாவட்டத்தின் சென்னூர் கிராமத்தைச் சேர்ந்த ஷைலஜா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், திருமணத்திற்கு முதல் நாள் அன்று மணப்பெண் ஷைலஜாவுக்கு விபத்து நிகழ்ந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

பதறிப்போன பெண்ணின் குடும்பத்தார் உடனடியாக ஷைலஜாவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பெண்ணுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்படி, பெண்ணுக்கு திருமணத்திற்கு முதல் நாள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், பெண் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதற்குள்ளாக மாப்பிள்ளை திருப்பதி வீட்டிற்கு தகவல் சென்ற நிலையில், இரு வீட்டாரும் கலந்து ஆலோசித்துள்ளனர்.

நிச்சயிக்கப்பட்ட தேதியில் திருமணம் நடைபெற வேண்டும் என இரு வீட்டாரும் தீர்க்கமாக முடிவு செய்து மருத்துவரிடம் தகவலை தெரிவித்தனர். மருத்துவமனையில் வைத்தே திருமணம் செய்து கொள்ள அனுமதி தேவை என கோரிக்கை வைக்க மருத்துவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இரு வீட்டாரின் முன்னிலையிலும், மருத்துவமனையில் வைத்தே மணப்பெண்ணும் மணமகனும் மாலை மாற்றி, தாலி கட்டி திருமணம் செய்துள்ளனர். இது அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இந்த திருமணத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தம்பதிக்கு அனைவரும் வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.

First published:

Tags: Marriage, Telangana