ஹோம் /நியூஸ் /இந்தியா /

வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரம்.. முதலாளி மற்றும் உறவினர்களை கொன்ற தொழிலாளர்கள்!

வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரம்.. முதலாளி மற்றும் உறவினர்களை கொன்ற தொழிலாளர்கள்!

சூரத்தில் 3 பேர் படுகொலை

சூரத்தில் 3 பேர் படுகொலை

வேலையை விட்டு நீக்கிய ஆத்திரத்தில் தொழிற்சாலை முதலாளி உள்ளிட்ட 3 பேரை இரு ஊழியர்கள் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் குஜராத்தில் அரங்கேறியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Gujarat, India

குஜராத் மாநிலத்தின் முக்கிய தொழில் மையமாக சூரத் பகுதி கருதப்படுகிறது. இங்குள்ள அம்ரோலி என்ற பகுதியில் நூற்பு ஆலை ஒன்றை கல்பேஷ் தோலாகியா என்பவர் நடத்தி வருகிறார். இந்த ஆலையில் உத்தரப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த பல புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், 10 நாள்களுக்கு முன்பாக ஒடிசாவைச் சேர்ந்த இரு இளைஞர்கள் இந்த ஆலையில் இரவு பணி செய்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒழுங்காக பணி செய்யாமல் தூங்கியுள்ளது, உரிமையாளர் கவனத்திற்கு சென்றுள்ளது. இதையடுத்து இருவரையும் உரிமையாளர் கல்பேஷ் விசாரித்துள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதில், மோதல் முற்றி இருவரையும் கல்பேஷ் பணியில் இருந்து நீக்கியுள்ளார். இது இருவருக்கும் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. உரிமையாளரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் நேற்று தொழிற்சாலைக்கு வந்த இரு தொழிலாளர்களும் உரிமையாளரை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

பின்னர் உள்ளே நுழைந்ததும், கல்பேஷை தங்கள் கையில் வைத்திருந்த கூரிய ஆயுதங்கள், அங்கிருந்து கம்புகளை வைத்து தாக்கத் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவத்தின் போது உரிமையாளர் கல்பேஷின் தந்தை தான்ஜி, உறவினர் கன்ஷியாம் ஆகியோரும் அருகே இருந்துள்ளனர்.தாக்குதலை தடுக்க முயன்ற போது கல்பேஷின் தந்தை மற்றும் உறவினர் மீதும் இரு தொழிலாளர்களும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த கொலை வெறி தாக்குதலில் உரிமையாளர் கல்பேஷ், அவரது தந்தை தான்ஜி, உறவினர் கன்ஷியாம் ஆகிய மூவரும் படுகாயமடைந்து உயிரிழந்தனர்.தாக்குதல் நடத்திய இருவரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய நிலையில், சிசிடிவி காட்சி ஆதாரங்களை வைத்து காவல்துறை அவர்களை கைது செய்துள்ளது.

முதல் கட்ட விசாரணையில் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தியை இவர்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கியது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அங்குள்ள தொழில் முனைவோரிடம் மாநில அரசு மற்றும் காவல்துறை ஆலோசனை நடத்தியது. மேலும், பணிக்கு எடுக்கும் நபர்களின் பின்புலத்தை நன்கு ஆராய்ந்து வேலை தருமாறு அவர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

First published:

Tags: Crime News, Gujarat, Murder, Surat