• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பாஜகவுக்கு சிக்னல் கொடுத்த திரிணாமுல் காங்கிரஸ்.. ரஜீப் பானர்ஜி அகர்தலாவில் இணைந்த ரகசியம்..

பாஜகவுக்கு சிக்னல் கொடுத்த திரிணாமுல் காங்கிரஸ்.. ரஜீப் பானர்ஜி அகர்தலாவில் இணைந்த ரகசியம்..

Rajib banerjee

Rajib banerjee

திரிணாமுல் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவியவர்கள் ஒவ்வொருவராக மீண்டும் தாய் கழகத்துக்கே திரும்பி வருகின்றனர்.

  • Share this:
திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர்களில் சுவேந்து அதிகாரிக்கு பின் பாஜகவில் சேர்ந்த 2வது பெரும் தலையாக கருதப்பட்ட முன்னாள் அமைச்சர் ரஜீப் பானர்ஜி பாஜகவில் இருந்து விலகி இன்று மீண்டும் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்றது. இதற்கு முன்னர் கடந்த ஆண்டு மேற்குவங்கத்தில் பாஜகவுக்கும், திரிணாமுல் காங்கிரஸுக்குமான அரசியல் உச்சத்தில் இருந்தது. திரினாமுல் காங்கிரஸில் இருந்து பல தலைவர்கள் பாஜகவுக்கு தாவினர். இதனால் மம்தா பானர்ஜிக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. கட்சி மாறியவர்களில் சுவேந்து அதிகாரிக்கு பின்னர் மிகவும் முக்கியமானவராக இருந்தவர் தான் ரஜீப் பானர்ஜி. இவர் அமைச்சராக இருந்தவர்.

இதனிடையே சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெருவாரியான வெற்றியை பெற்று 3வது முறையாக ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து திரிணாமுல் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவியவர்கள் ஒவ்வொருவராக மீண்டும் தாய் கழகத்துக்கே திரும்பி வருகின்றனர். முன்னதாக 5 எம்.எல்.ஏக்கள் திரிணாமுலில் இணைந்திருக்கின்றனர். அந்த வகையில் ரஜீப் பானர்ஜி இன்று மீண்டும் பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸில் இணைந்திருக்கிறார்.

Also read: எங்களை அங்கீகரிக்காவிட்டால்… உலக நாடுகளுக்கு தாலிபான்கள் விடுத்த எச்சரிக்கை!

திரிபுரா மாநில தலைநகரான அகர்தலாவில் மம்தாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் முன்னிலையில் ரஜீப் பானர்ஜி இணைந்திருக்கிறார். இவர் தோம்ஜூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ரஜீப் பானர்ஜியை அகர்தலாவில் வைத்து இணைத்திருப்பது பாஜகவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கொடுத்திருக்கும் சிக்னல் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மேற்குவங்க வெற்றியை அடுத்து தேசிய அரசியல் பக்கமாக மம்தா திரும்பியிருக்கிறார். அவருக்கு உறுதுணையாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இருந்து வருகிறார். அடுத்த ஆண்டு கோவா சட்டமன்ற தேர்தல் மற்றும் 2023ம் ஆண்டு திரிபுரா மாநில தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை களமிறக்க காய் நகர்த்தி வருகிறார் மம்தா. இப்படியிருக்க திரிபுராவில் ஆளும் பாஜகவுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கில், தங்கள் கட்சியில் இருந்து கூட்டிச் செல்லப்பட்ட ரஜீப் பானர்ஜியை அகர்தலாவில் வைத்து இணைத்திருக்கிறது திரிணாமுல் காங்கிரஸ் தலைமை.

Also read: லெபனான் தூதரை தங்கள் நாடுகளில் இருந்து வெளியேற்றிய 4 நாடுகள் – காரணம் என்ன?

முகுல் ராயும், ரஜீப் பானர்ஜியும் ஏற்கனவே திரிபுராவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பதால் ரஜீபின் வருகை திரிணாமுலுக்கு உதவியிருக்கிறது. ரஜீபுக்கு திரிபுராவில் இருக்கும் அரசியல் செல்வாக்கு தங்கள் கட்சிக்கு கைகொடுக்கும் என மம்தா கருதுவதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: