ஹோம் /நியூஸ் /இந்தியா /

5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 12 வயது சிறுவன்..உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்

5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 12 வயது சிறுவன்..உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்

5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 12 வயது சிறுவன்

5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 12 வயது சிறுவன்

புகாரின் அடிப்படையில் சிறுவனை கைது செய்த காவல்துறையினர் அவரை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Uttar Pradesh, India

  12 வயது சிறுவன் 5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் உக்ஹைதி என்ற பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, 5 வயது சிறுமி தனது வீட்டின் முன் விளையாடியுள்ளார். அப்போது அப்பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுவன் சிறுமியை அங்கிருந்து தனியான இடத்திற்கு ஏமாற்றி அழைத்து சென்றுள்ளார்.

  அங்கு வைத்து சிறுமியை  சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால் மிக மோசமான பாதிப்புக்கு ஆளான சிறுமி அதே நிலையில் கஷ்டப்பட்டு வீடு வந்து சேர்ந்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடூரத்தை வீட்டாரிடம் தெரிவித்த நிலையில், அவரது குடும்பதினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அங்கிருந்த காவல்துறையை அணுகி புகார் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல்துறை சிறார் சட்டத்தின் வழக்குப் பதிவு செய்து சிறுவனை கைது செய்துள்ளது.

  இதையும் படிங்க: நடனம் ஆடியபோது இளைஞர் மரணம்.. தகவல் அறிந்து தந்தையும் உயிரிழந்த சோகம்- அதிர்ச்சி வீடியோ

  நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அரங்கேறி வரும் நிலையில், 12 வயது சிறுவனை இது போன்ற மோசமான குற்றத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Attack on girls, Crime News, Rape, Uttar pradesh