கெஜ்ரிவால் அரசின் அதிகாரங்களை முடக்கும் மசோதா நிறைவேற்றம்: மத்திய அரசு அதிரடி

கெஜ்ரிவால் அரசின் அதிகாரங்களை முடக்கும் மசோதா நிறைவேற்றம்: மத்திய அரசு அதிரடி

நரேந்திர மோடி-கெஜ்ரிவால். | கோப்புப்படம்.

இந்த மசோதா அடுத்து ராஜ்யசபாவுக்கு செல்கிறது. டெல்லி மாநில அரசின் துணை நிலை ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதி இவருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசைக் காட்டிலும் மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் வழங்கும் மசோதாவாகும் இது.

 • Share this:
  டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கெஜ்ரிவால் அரசின் அதிகாரங்களை முடக்கும் விதமாக டெல்லியில் மத்திய அரசின் அதிகாரத்தை அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

  டெல்லி அரசு தேசியத் தலைநகர் பிராந்திய திருத்த மசோதா, 2021 லோக்சபாவில் நிறைவேறியது. இந்த மசோதா மூலம் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் அதிகாரம் குறைக்கப்பட்டு மத்திய அரசு அல்லது துணைநிலை ஆளுநரின் அதிகாரத்தை அதிகரிக்கும் மத்திய பாஜக அரசின் முயற்சி வெற்றி கண்டுள்ளது.

  இந்த மசோதா அடுத்து ராஜ்யசபாவுக்கு செல்கிறது. டெல்லி மாநில அரசின் துணை நிலை ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதி இவருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசைக் காட்டிலும் மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் வழங்கும் மசோதாவாகும் இது.

  உச்ச நீதிமன்றம் வகுத்தளித்த அரசியல் சாசன முறைப்படியான நிர்வாகத்தை கருத்தில் கொண்டு இந்த மசோதா மேலும் மாநில அரசின் பொறுப்புகளுக்கு விளக்கம் அளிப்பதாக மத்திய அரசு இந்த மசோதா குறித்து தெரிவித்துள்ளது.

  இது டெல்லி மக்கள் மீதான அவமதிப்பு என்று கெஜ்ரிவால் இதனை விமர்சித்துள்ளார்.

  “இந்த மசோதா டெல்லி மக்களை அவமதிக்கும் செயல். மக்கள் யாருக்கு வாக்களித்தார்களோ அவர்களிடமிருந்து அதிகாரத்தைப் பறிக்கும் திட்டமிட்ட செயல் இந்த மசோதா. மக்களால் தோற்கடிக்கப்பட்ட பாஜக மக்களை ஏமாற்றுகிறது” என்று கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.

  டெல்லி 2020 சட்டப்பேரவைத் தேர்தலில் 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 62 இடங்களில் வெல்ல, பாஜக 8 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. டெல்லியின் மக்கள் நல ஆட்சியை துணை நிலை ஆளுநர் மூலம் கெடுப்பதற்காக பல செயல்களை செய்து வருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் பல முறை கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார். ஒருமுறை சாலையில் தர்ணா போராட்டம் கூட நடத்தினார், இந்தியாவில் முதல் முறையாக ஒரு மாநில முதல்வர் சாலையில் தர்ணா போராட்டம் நடத்தியதாக அது பேசப்பட்டது.

  இந்த புதிய மசோதா மூலம் எந்த ஒரு திட்டம், செயல்திட்டம், மக்கள் நலத்திட்டத்தை டெல்லி மாநில அரசு முன்னெடுத்தாலும் துணை நிலை ஆளுநரின் அனுமதி பெறாமல் செய்ய முடியாது.

  இந்நிலையில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட பாஜக அரசு கொல்லைப்புறம் வழியாக டெல்லி மாநில அதிகாரங்களைப் பறிக்கப்பார்க்கிறது, இது டெல்லி மக்களை ஏமாற்றும் செயல் என்று கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.
  Published by:Muthukumar
  First published: