இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை கோரத்தாண்டவமாடிக் கொண்டிருக்கும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் உயிரிழக்கும் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆக்ஸிஜனுக்கான மக்கள் அன்றாடம் அல்லாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் மக்களின் உயிர் காக்கும் நடவடிக்கையாக ஆக்ஸிஜன் தயாரிப்பு பணிகளை துரிதப்படுத்தியதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பாராட்டு பெற்றுள்ளது.
உச்சநீதிமன்றம் இன்று ஆக்ஸிஜன் சப்ளை குறித்தான வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, குஜராத்தின் ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் லிக்விட் மருத்துவ ஆக்ஸிஜன் தயாரிப்பை தொடங்கியதுடன் தயாரிப்பை 700 மெட்ரிக் டன்னாக அதிகப்படுத்தியதற்காக உச்சநீதிமன்றம் ரிலையன்ஸ் நிறுவனம் நிறுவனம் பாராட்டு பெற்றிருக்கிறது.
"Its an eye opener for me as an administrator to see how Reliance Industries Limited Jamnagar ha produced LMO and now it has gone up by another 700 MT" Ms. Dwara before Justice Chandrachud @flameoftruth @reliancejio #SupremeCourt #SupremeCourtofIndia #JusticeChandrachud pic.twitter.com/75QfOMookx
— Bar & Bench (@barandbench) April 30, 2021
உச்சநீதிமன்ற நீதிபதி சந்திர சூட் முன்னிலையில் நடைபெற்ற ஆக்ஸிஜன் குறித்த வழக்கின் விசாரணையில், கூடுதல் செயலர் சுமிதா துவாரா கூறுகையில், “ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் லிக்விட் மருத்துவ ஆக்ஸிஜன் தயாரிப்பை தொடங்கி அதன் உற்பத்தி அளவை 700 மெட்ரிக் டன்னாக உயர்த்தியது ஆட்சியாளர்களின் கண்ணை திறக்கச் செய்வதாக அமைந்துள்ளது” என குறிப்பிட்டார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தொடக்கத்தில் 100 டன் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் விரைவாகவே உற்பத்தியானது 700 டன்னாக அதிகரிக்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் ஆக்ஸிஜன் கொரோனாவால் மோசமான பாதிப்பை சந்தித்து வரும் மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன் மூலம் தீவிர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள 70,000 பேர் தினமும் பலனடைந்து வருகின்றனர்.
இதுதவிர, கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை மேற்கொள்வதற்காக ஆக்ஸிஜன் வசதி கொண்ட 1,000 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு கொரோனா சிகிச்சை மையத்தை குஜராத்தின் ஜாம்நகரில் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் போர்க்கால அடிப்படையில் கட்டமைத்து வருகிறது.
முதலில் 400 படுக்கைகளுடன் கூடிய மையமானது ஜாம்நகரில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மையத்தில் ஒரு வார காலத்திற்குள் ஏற்படுத்தப்படும் எனவும் ஜாம்நகரின் வேறு ஒரு பகுதியில் 600 படுக்கைகளுடன் கூடிய கொரோனா மையம் அடுத்த இரண்டு வார காலத்திற்குள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: COVID-19 Second Wave, Mukesh ambani, Nita Ambani, Oxygen, Reliance, Reliance Foundation