மீண்டும் சிபிஐ இயக்குநரான அலோக் வர்மா...! பணியிட மாற்றங்களை ரத்து செய்து அதிரடி

CBI vs CBI | சிபிஐ இயக்குநராக மீண்டும் பதவியேற்ற அலோக் வர்மா, இடைக்கால சிபிஐ இயக்குநர் நாகேஸ்வர ராவ் செய்த பணியிடமாற்றங்களை ரத்து செய்தார்.

news18
Updated: January 10, 2019, 9:31 AM IST
மீண்டும் சிபிஐ இயக்குநரான அலோக் வர்மா...! பணியிட மாற்றங்களை ரத்து செய்து அதிரடி
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா
news18
Updated: January 10, 2019, 9:31 AM IST
சிபிஐ இயக்குநராக மீண்டும் பதவியேற்ற அலோக் வர்மா அதிகாரிகளின் பணியிடமாற்றங்களை ரத்து செய்தார்.

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையேயான மோதலில் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.

இடைக்கால சிபிஐ இயக்குநராக பதவியேற்ற நாகேஸ்வர ராவ், அலோக் வர்மா அணியை சேர்ந்த 10 அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், அலோக் வர்மாவை மீண்டும் பணியமர்த்துமாறு நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ இயக்குநராக மீண்டும் பதவியேற்ற அலோக் வர்மா, 13 அதிகாரிகளை இடமாற்றம் செய்த இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் பிறப்பித்த உத்தரவுளை ரத்து செய்தார்.

இதனிடையே, அலோக் வர்மாவுக்கு முழு அதிகாரம் வழங்குவது தொடர்பாக உயர்நிலைக் குழு ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்ததை அடுத்து, குழுவின் கூட்டம் நடைபெற்றது.

ஆனால் இந்த கூட்டத்தில் எந்தவிதமான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அதனால் இடைக்கால சிபிஐ இயக்குநர் நாகேஸ்வர ராவ் செய்த பணியிடமாற்றங்களை அலோக் வர்மா ரத்து செய்தார்.

Also Read... #CBIvCBI ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான ஆதாரங்கள் உள்ளன - அலோக் வர்மா
Loading...
Also see... மோடியின் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்
First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...