• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஆந்திரா மாநிலத்துக்கு மேலும் 4 தலைநகரங்கள்?

ஆந்திரா மாநிலத்துக்கு மேலும் 4 தலைநகரங்கள்?

ஜெகன் மோகன் ரெட்டி

ஜெகன் மோகன் ரெட்டி

முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் எண்ணமான அமராவதியை ஆந்திர தலைநகராக மாற்றுவதற்கான திட்டத்தை நீண்டகாலமாக ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எதிர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆந்திர மாநிலத்திற்கு மேலும் 4 தலைநகரங்களை உருவாக்க அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்றது முதல் அம்மாநிலத்துகான பல்வேறு புதிய திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். இந்நிலையில் ஆந்திர மாநிலத்திற்கு மேலும் 4 தலைநகரங்களை உருவாக்க உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அவர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உருவாக்கிய அமராவதி, அலுவலகத் தலைநகராக மட்டுமே செயல்படும் என தெரிகிறது. அமராவதி நீங்கலாக விஜயநகரம், காக்கிநாடா, கடப்பா மற்றும் குண்டூர் ஆகிய 4 நகரங்களை தலைநகரங்களாக அறிவிக்க திட்டமிட்டுள்ள ஜெகன்மோகன் ரெட்டி, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த போது இதுகுறித்து விளக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் 4 தலைநகரங்களுக்கும் பிரதிநிதிகளாக, 5 துணை முதல்வர்களை இந்த ஆண்டுக்குள் ஜெகன் மோகன் ரெட்டி நியமிக்க உள்ளார். இதன்மூலம், பரவலாக்கப்பட்ட ஆந்திராவின் வளர்ச்சிக்கு துணை முதல்வர்கள் உறுதியாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் எண்ணமான அமராவதியை ஆந்திர தலைநகராக மாற்றுவதற்கான திட்டத்தை நீண்டகாலமாக ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எதிர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க... மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் ரூ.1.76 லட்சம் கோடி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: