மேற்கு வங்கம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 6 மாநில ஆளுநர்கள் அதிரடி மாற்றம்!

மேற்கு வங்காளம் மாநிலத்தின் ஆளுநராக இருந்த கேஷரி நாத் திரிபாதி மாற்றப்பட்டு புதிய ஆளுநராக ஜகதீப் தன்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

news18
Updated: July 20, 2019, 2:43 PM IST
மேற்கு வங்கம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 6 மாநில ஆளுநர்கள் அதிரடி மாற்றம்!
டெல்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகை
news18
Updated: July 20, 2019, 2:43 PM IST
மேற்கு வங்கம், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றி குடியரசுத்தலைவர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாட்டின் 6 மாநிலங்களில் பதவி வகிக்கும் ஆளுநர்களை இடமாற்றம் செய்து குடியரசுத்தலைவர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, மத்திய பிரதேசம் மாநில ஆளுநராக இருந்த ஆனந்திபென் பட்டேல், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்காளம் மாநிலத்தின் ஆளுநராக இருந்த கேஷரி நாத் திரிபாதி மாற்றப்பட்டு புதிய ஆளுநராக ஜகதீப் தன்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.


ஜகதீப் தன்கர் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக இருந்தவர் ஆவார். பீகாரின் ஆளுநராக இருந்த லால் ஜி டண்டான், மத்தியப்பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பீகாரின் புதிய ஆளுநராக பேகு சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாகலாந்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி, திரிபுரா மாநிலத்தில் புதிய ஆளுநராக ரமேஷ் பய்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ரமேஷ் பய்ஸ், பாஜகவின் மூத்த தலைவர் ஆவார்.

First published: July 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...