ஹோம் /நியூஸ் /இந்தியா /

தமிழ்மீது ஆர்வம்... தமிழரை திருமணம் செய்து வளைகாப்பு கொண்டாடிய அமெரிக்க பெண்!

தமிழ்மீது ஆர்வம்... தமிழரை திருமணம் செய்து வளைகாப்பு கொண்டாடிய அமெரிக்க பெண்!

தமிழ் முறைபடி வளைகாப்பு கொண்டாடிய சமந்தா

தமிழ் முறைபடி வளைகாப்பு கொண்டாடிய சமந்தா

அமெரிக்க பெண் தமிழ் கலாச்சாரத்தின் மீது ஆர்வம் கொண்டு தமிழரை திருமணம் செய்து வளைகாப்பு கொண்டாடியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் சேர்க்கும் விதமாக, ஒரு சிலர் வேற்று காலச்சாரம் மற்றும் பண்பாட்டின் மீது ஆர்வம் கொண்டு அதை பின்பற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படி வெளிநாட்டினர் பலருக்கு தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரம் மீது காலம் காலமாகவே ஆர்வம் இருந்து வந்துள்ளது. இதற்கு சமீபத்திய உதாரணமாக இருப்பவர் அமெரிக்கா பெண்ணான சமந்தா ஜோஸ்.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியைச் சேர்ந்த இவருக்கு தமிழ் மொழி மீது பிரியம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக யூடியூப் மூலமாக தமிழ் மொழியை கற்கத் தொடங்கியுள்ளார். பின்னர் மெல்ல சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் ஆங்கிலம் கலந்த தமிழான தங்கிலிஷில் பேசி பேசி தனது தமிழ் மொழி அறிவை வளர்த்துள்ளார். அப்போது தான் இவருக்கு தமிழ் இளைஞரான கண்ணன் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

நாளடைவில் இருவருக்கும் பிடித்துப் போக திருமணம் செய்ய முடிவெடுத்து 2019ஆம் ஆண்டில் மணம் முடித்துள்ளனர். தனது திருமணத்தை புடவை கட்டி தமிழ் பாரம்பரிய முறையில் நடத்தியுள்ளார். தற்போது சமந்தா கர்ப்பிணியாக உள்ள நிலையில், அவருக்கு இன்று வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இதையும் படிங்க: WATCH - இசை கலைஞர்களுடன் குஷியாக டோல் முரசு அடித்த பிரதமர் மோடி.. வீடியோ!

புடவை கட்டி கையில் வளையல்கள் அணிந்து வளைகாப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார் சமந்தா. மேலும் பட்டு சேலை வளையல்களுடன் தனது கணவருடன் சேர்ந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதற்கு பலரும் லைக் செய்து வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

First published:

Tags: Tamil Culture, Viral News