முகப்பு /செய்தி /இந்தியா / கட்டாய மத மாற்ற தடை சட்டத்தில் 507 பேர் கைது - உ.பி அரசு தகவல்

கட்டாய மத மாற்ற தடை சட்டத்தில் 507 பேர் கைது - உ.பி அரசு தகவல்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கட்டாய மத மாற்ற தடை சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளில் 507 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Uttar Pradesh, India

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்தயநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு கட்டாய மதமாற்ற தடை சட்டமானது 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமலுக்கு வந்தது. இந்நிலையில், இந்த சட்டத்தை அம்மாநில அரசு கறாராக நடைமுறைப்படுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் அம்மாநிலத்தில் கட்டாய மதமாற்றம் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் குறித்த புள்ளிவிவரங்களை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் கட்டாய மதமாற்றம் தொடர்பாக 291 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த வழக்கின் கீழ் இதுவரை 507 குற்றவாளிகளை அம்மாநில காவல்துறை கைது செய்துள்ளது. 291 வழக்குகளில் பாதிக்கப்பட்ட 150 பேர் தாங்கள் கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் தந்துள்ளனர். இதில் 59 பேர் சிறார்கள் ஆவர்.

பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பெரும்பாலும் பரேலி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.பெரும்பாலும் மாற்றுத்திறனாளி சிறார்களைக் குறிவைத்து இந்த கட்டாய மதமாற்ற நிகழ்வுகள் நடைபெறுவதாக உத்தரப் பிரதேச அரசு தகவல் தெரிவிக்கின்றது.புதிய சட்டத்தின் கீழ் கட்டாய மதமாற்ற குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.15,000 முதல் ரூ.50,000 வரை அபராதமும் விதிக்கப்படும். சிறார்கள், பழங்குடியின பெண்களை கட்டாயமாக மதம் மாற்றினால் 3 முதல் 10 ஆண்டு சிறை தண்டனை ரூ.15,000 அபராதம் எனவும், கும்பலாக மதமாற்றத்தில் ஈடுபட்டால் 3 முதல் 10 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படும்.

இதையும் படிங்க: மேற்கு வங்கத்திற்கு புதிய ஆளுநர் நியமனம் - இல.கணேசன் விடுவிப்பு

அதேபோல், மாற்று மத திருமணத்தில் ஈடுபடுவோர் மாவட்ட ஆட்சியரிடம் திருமணத்திற்கு இரு மாதங்களுக்கு முன்னர் தகவல் தெரிவிக்க வேண்டும்.திருமணம் என்ற ஒரே காரணத்திற்காக மதம் மாற விரும்பினால் அந்த திருமணம் சட்டப்படி செல்லாது என இச்சட்டத்தில் உள்ளது.

First published:

Tags: Arrest, Religious conversion, Uttar pradesh