ஹோம் /நியூஸ் /இந்தியா /

திருப்பதியில் பத்து மாதத்தில் ரூ.1200 கோடி உண்டியல் காணிக்கை..

திருப்பதியில் பத்து மாதத்தில் ரூ.1200 கோடி உண்டியல் காணிக்கை..

திருமலை

திருமலை

2022-23 நிதி ஆண்டில் ஏழுமலையானின் உண்டியல் காணிக்கை வருமானம் ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tirupati, India

  திருப்பதி ஏழுமலையானுக்கு கடந்த ஜனவரி மாத முதல் அக்டோபர் மாதம் வரை 10 மாதத்தில் பக்தர்கள் 1,193 கோடியே 11 லட்ச ரூபாயை காணிக்கையாக சமர்ப்பித்து உள்ளனர்.

  2022-23 நிதி ஆண்டில் ஏழுமலையானின் உண்டியல் காணிக்கை வருமானம் ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் 10 மாதத்தில் 1192 கோடியே 81 லட்ச ரூபாய் காணிக்கை வருமானம் கிடைத்துள்ளது.

  ஜனவரி மாதம் 79 கோடியே 39 லட்சம் ரூபாய்
  பிப்ரவரி மாதம் 79 கோடியே 34 லட்ச ரூபாய்
  மார்ச் மாதம் 128 கோடியே 60 லட்சம் ரூபாய்
  ஏப்ரல் மாதம் 126 கோடியே 65 லட்ச ரூபாய்
  மே மாதம் 130 கோடியே 29 லட்ச ரூபாய்
  ஜூன் மாதம் 123 கோடியே 76 லட்ச ரூபாய்
  ஜூலை மாதம் 139 கோடியே 75 லட்ச ரூபாய்
  ஆகஸ்ட் மாதம் 140 கோடியே 34 லட்ச ரூபாய்
  செப்டம்பர் மாதம் 122 கோடியே 19 லட்ச ரூபாய்
  கடந்த அக்டோபர் மாதம் 122 கோடியே 80 லட்சம் ரூபாயை பக்தர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பித்துள்ளனர்.இதன் மூலம் கடந்த 10 மாதங்களில் 1193 கோடியை 11 லட்சம் ரூபாய் காணிக்கை வருமானமாக ஏழுமலையானுக்கு கிடைத்துள்ளது.
  மேலும் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து எட்டு மாதங்களாக 100 கோடி ரூபாய்க்கும் அதிக தொகையை பக்தர்கள் ஏழுமலையானுக்கு ஒவ்வொரு மாதமும் காணிக்கையாக சமர்ப்பித்து உள்ளனர்.
  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Tirupathi, Tirupati Devotees, Tirupati temple