முகப்பு /செய்தி /இந்தியா / 70 கி.மீ காரில் இழுத்து செல்லப்பட்ட நாய்... சிறுமியின் அன்பால் குட்டிகளுடன் சேர்ந்த தாய் - நெகிழ்ச்சி சம்பவம்

70 கி.மீ காரில் இழுத்து செல்லப்பட்ட நாய்... சிறுமியின் அன்பால் குட்டிகளுடன் சேர்ந்த தாய் - நெகிழ்ச்சி சம்பவம்

தெருநாயுடன் சிறுமி சான்வி

தெருநாயுடன் சிறுமி சான்வி

தனது 3 குட்டிகளிடம் இருந்து 70 கிமீ தூரம் பிரிந்து சென்ற தெருநாயை 5 வயது சிறுமி மீண்டும் குட்டிகளுடன் சேர்த்து வைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karnataka, India

மனிதர்களுக்கு மட்டுமல்ல உலகின் அனைத்து உயிர்களுக்கும் தாய்மை உணர்வு அடிப்படையில் ஒன்று தான் என்பதை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி தனது நெகிழ வைக்கும் செயலால் நிரூபித்துள்ளார். இந்த சிறுமி 70 கிமீ தூரம் இடம்மாறி சென்ற தெரு நாய் ஒன்றை அதன் மூன்று குட்டிகளுடன் சேர்த்து வைத்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பால்பா பகுதியில் வனத்துறை அலுவலராக இருப்பவர் சந்தோஷ் ராய். இவருக்கு சான்வி என்ற 5 வயது மகள் உள்ளார். இவர் தனது வீட்டில் அருகே உள்ள தெருநாய் ஒன்றுக்கு உணவு வைத்து பழகி வருகிறார். இந்த நாய்க்கு மூன்று குட்டிகள் உள்ளன.இந்நிலையில், இந்த நாய் குட்டி கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி அன்று தெருவில் ஓடிக்கொண்டிருந்த போது காரில் மோதி விபத்து ஏற்பட்டது. அந்த பகுதியாக கோயிலுக்கு வந்த நபர்களின் காரில் இந்த நாய் மோதியது.

அவர்கள் காரை நிறுத்தி பார்த்த போது வெளியே நாய் தென்படிவில்லை. ஒருவேளை நாய் தப்பி ஓடியிருக்கும் என நினைத்து சம்பவ இடத்தில் இருந்து சுமார் 70 கிமீ தூரத்தில் இருக்கும் அவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். வீடு சென்று பார்த்த போது தான் அந்த நாய் காரின் முன்பக்க பம்பரில் சிக்கி உயிருடன் இருந்தது தெரியவந்தது. உடனடியாக மெக்கானிக் உதவியை நாடி நாயை மீட்டனர். இதன் காரணமாக இந்த நாய் தனது வசிப்படமான பால்பவில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள புத்துர் பகுதிக்கு போய்விட்டது.

நாய் கார் பம்பரில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட செய்தியை வனத்துறை அலுவரின் மகளான சான்வி டிவியில் பார்த்து தெரிந்துகொண்டார். அந்த நாய்யும் குட்டிகளும் தனித்தனியே பிரிந்து கஷ்டப்படுகின்றன. எனவே, நாம் அந்த நாயை மீண்டும் இங்கு அழைத்து வருவோம் என அப்பாவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: எனக்கு 65..உனக்கு 23.. 6 மகள்களின் சம்மதத்துடன் நடந்த அதிசய திருமணம்..!

மகளின் உணர்வுபூர்மான கோரிக்கை ஏற்ற தந்தையும் புத்தூர் பகுதியில் உள்ள நபர்களிடம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தெருவில் இருந்த நாயை கார் வைத்து பால்பாவிற்கு அழைத்து வந்துள்ளார். நாய் தனது மூன்று குட்டிகளுடன் இணைந்தது அவர்களுக்கு மட்டுமல்லாது, சிறுமி சான்விக்கும் மட்டடற்ற மகிழ்ச்சியை தந்தது.சிறுமி சான்வியின் இந்த தூய உணர்வை பலரும் பாராட்டி வருகின்றனர்.

First published:

Tags: Dog, Dog Care, Karnataka