கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 20 வயதான ஹேமந்த் தத். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆன்லைன் மூலமாக செகன்ட் ஹேண்ட் ஐபோன் மொபைல் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இவரது தாயும், சகோதரியும் உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில், ஹேமந்த் தத் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி அன்று இவர் ஆர்டர் செய்த செல்போனை ஹேமந்த் நாயக் என்ற டெலிவரி பாய் டெலிவரி செய்ய எடுத்து வந்துள்ளார். தனக்கு வந்த பார்சலை வாங்கிக்கொண்ட இளைஞர் பணம் எடுத்து வருகிறேன் அதுவரை வீட்டிற்குள் இருங்கள் என டெலிவரி பாய் நாயக்கை வீட்டிற்குள் அழைத்துள்ளார்.
உள்ளே சென்ற நாயக் பணத்திற்காக காத்திருந்த நிலையில், சமையல் அறைக்குள் சென்ற ஹேமந்த் கத்தியை எடுத்து வந்து டெலிவரி பாய் நாயக்கை குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை சாக்குப்பையில் கட்டி வீட்டு பாத்ரூமில் இரண்டு நாள்கள் வைத்துள்ளார். பின்னர் உடல் துர்நாற்றம் வீசத் தொடங்கியதால், சாக்குப்பையில் இருந்த உடலை தனது வண்டியில் எடுத்து சென்று வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் வைத்து பெட்ரோல் உற்றி எரித்துள்ளார்.
கொடூர கொலை செய்துவிட்டு தனது புதுபோனுடன் கூலாக சுற்றிக்கொண்டிருந்த ஹேமந்த்தை சிசிடிவி ஆதாரங்கள் அடிப்படையில் கர்நாடகா காவல்துறை கைது செய்துள்ளது. இவர் பெட்ரோல் வாங்கியது, உடலை வாகனத்தில் எடுத்து சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் இளைஞரை கர்நாடகா காவல்துறை கைது செய்து விசாரித்தது. விசாரணையில் இவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதையும் படிங்க: 11 குழந்தைகளை பெற்ற தாய்... குடும்பக் கட்டுப்பாடு செய்ததால் வீட்டை விட்டு வெளியேற்றிய கணவன்..!
தனக்கு ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், கையில் பணம் இல்லை என்பதால் திட்டம் தீட்டி இந்த சம்பவத்தை அரங்கேற்றியதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவர் ஏற்கனவே, டெலிவரி பாய்யாக வேலை பார்த்தவர் என்றும், பணியின் போது டெலிவரி பொருள்களை திருடும் பழக்கம் இவருக்கு இருந்ததால், இவரின் வேலைகள் பறிபோனதும் விசாரணையில் வெளிவந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, I Phone, Karnataka, Murder