ஹோம் /நியூஸ் /இந்தியா /

அடிக்கடி ரயில் பயணம் செய்பவர்களாக? இந்த செய்தி உங்களுக்கு தான்

அடிக்கடி ரயில் பயணம் செய்பவர்களாக? இந்த செய்தி உங்களுக்கு தான்

 ரயில்

ரயில்

ஐஆர்சிடிசி கணக்கைப் பயன்படுத்தி புக்கிங் செய்து அடிக்கடி பயணிப்பவர்களுக்கு வசதியாக தற்போது புதிய நடைமுறையை இந்திய ரயில்வே நிர்வாகம் நடைமுறைக்குக் கொண்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  இந்தியாவில் பெரும்பாலான மக்களின் போக்குவரத்துத் தேவைகளை நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது ரயில்வே துறை. அனைத்துத் தரப்பட்ட மக்கள் முதல் அனைவரும் பயணிக்கும் இந்த ரயில்வே துறையில் அவ்வப்போது பல மாற்ற்ங்களை இந்திய ரயில்வே நிர்வாகம் மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் ரயில் சேவையை ஐஆர்சிடிசி கணக்கைப் பயன்படுத்தி புக்கிங் செய்து அடிக்கடி பயணிப்பவர்களுக்கு வசதியாக தற்போது புதிய நடைமுறையை இந்திய ரயில்வே நிர்வாகம் நடைமுறைக்குக் கொண்டுள்ளது.

  ஆனால் இதற்கு ஆதாரை ஐஆர்சிடிசியுடன் இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. முன்னதாக IRCTC கணக்கில் ஆதாரை இணைத்திருந்தால் மாதத்திற்கு 12 டிக்கெட்டுகளும், இல்லையென்றால் 6 டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யும் நடைமுறை இருந்தது. தற்போது 24 டிக்கெட்டுகள் வரை மாதத்திற்கு IRCTC மூலம் புக்கிங் செய்துக்கொள்ளலாம். இதோ இதற்கான வழிமுறைகள் இங்கே.

  IRCTC கணக்கில் ஆதார் சரிபார்க்கும் முறை:

  முதலில் உங்களது IRCTC கணக்கில் உள்நுழைந்து நீங்கள் மேற்கொள்ளவிருக்கும் பயண விபரங்களை உள்ளீடு செய்து புக்கிங் செய்ய ஆரம்பிக்கவும்.

  இந்தப் பக்கத்தில் நீங்கள் செல்ல விரும்பும் ரயில் மற்றும் வகுப்பைத் தேர்வு செய்து புக்கிங் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

  தற்போது ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு, ஒரு பயணி தனது சுயவிபரத்தை ஆதாருடன் சரிபார்க்க வேண்டும். எனவே பயணிகளின் உள்ளீடு பக்கத்தில், பயணிகளின் பெயரைக் கிளிக் செய்ய வேண்டும். தொடர்ந்து அந்த பட்டியலில் இருந்து முதன்மை பட்டியலில் உள்ள அனைத்து பயணிகளின் பெயர் மற்றும் ஆதார் அடையாள அட்டை விபரங்களைக் கொடுத்து மாஸ்டர் பட்டியலை உருவாக்கிக் கொள்ள வேண்டும்..

  பின்னர் முன்பதிவு செயல்முறையைத் தொடர்ந்து உங்களது விபரங்ளை மதிப்பாய்வு மற்றும் பயணிக்கும் பயணிகளின் ஆதார் விபரங்களை சரிபார்க்கவும்.

  இதனைத் தொடர்ந்து பேமெண்ட் கேட்வே முறையைத் தேர்ந்தெடுத்து, பணம் செலுத்தவும். இறுதியில் உங்களுடைய விபரங்களை சரியாக உள்ளதா? என உறுதிப்படுத்தி கொண்ட பின்னர் சமிட் கொடுக்கவும்.

  இதுபோன்ற முறைகளை நீங்கள் பின்பற்றினாலே மாதத்திற்கு உங்களது ஐஆர்சிடிசி லாகின் மூலம் 24 ரயில் டிக்கெட்டுகளை நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஒரு வேளை நீங்கள் இதுவரை ஆதாரை இணைக்கவில்லை என்றால் இதோ இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்..

  எம்எல்ஏக்கு போட்டியிடும் ஜடேஜா மனைவி? பாஜகவின் நட்சத்திர வேட்பாளர்.. களைகட்டும் குஜராத் தேர்தல்!

  IRCTCல் ஆதார் இணைக்கும் முறை:

  முதலில் https://www.irctc.co.in/nget/train-search என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் முகப்பு பக்கத்தில் உள்ள MY account என்ற பக்கத்தில் link your aadhaar என்பதை கிளிக் செய்யவும். இதனை தொடர்ந்து ஆதார் தொடர்பான விபரங்களை உள்ளீடு செய்து OTP என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும். பின்னர் ஓடிபியை உள்ளீடு செய்து சரிபார் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்த நடைமுறை முடிந்ததும் உங்களின் ஆதார் ஐஆர்சிடிசி கணக்குடன் இணைக்கப்படும்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Indian Railways, IRCTC, Train