Home /News /national /

இந்தியாவில் 18 வயதை தாண்டியவர்களில் 75 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர் : பிரதமர்

இந்தியாவில் 18 வயதை தாண்டியவர்களில் 75 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர் : பிரதமர்

Corona Vaccine

Corona Vaccine

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,34,281 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பதிவை விட சற்று குறைவானதாகும்.

    இந்தியாவில் 18 வயதை தாண்டியவர்களில் 75 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியை முழுவதுமாக செலுத்திக் கொண்டார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மற்ற அனைத்து செயல்முறைகளையும் விட தடுப்பூசிதான் அதிக பலனை தந்து கொண்டு இருக்கிறது. இந்தியாவை பொருத்தளவில், கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த வாய்ப்பு... அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை!

    இவை இலவசமாக வழங்கப்பட்ட போதிலும், அதனை செலுத்திக் கொள்வதில் பொதுமக்களில் சிலர் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் பக்க விளைவுகள் ஏற்படுமோ என்கிற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது.

    இதற்கிடையே ஒவ்வொரு மாநிலங்களிலும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவை மாவட்டந்தோறும் பரவலாக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகளை செலுத்தி வருகிறார்கள்.

    மேலும் படிக்க...  ஒரு காலத்தில் என்சிசியில் தீவிர உறுப்பினராக இருந்தேன்.. பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியாவில் 2 டோஸ்கள் தடுப்பூசி வழங்கப்படுகிறது. தேவைப்படுவோர் கூடுதலாக பூஸ்டர் டோஸ்களை செலுத்திக் கொள்ளலாம். மருத்துவ துறையில் முன்னணி வகிக்கும் இஸ்ரேலில் 2வது பூஸ்டர் டோஸை செலுத்திக் கொள்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்தியாவில் வயது வந்தவர்களில் முழுவதுமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 75 சதவீதத்தை கடந்து விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதற்காக உழைத்த அனைவருக்கும் மோடி பாராட்டுக்களை கூறியுள்ளார்.

    கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,34,281 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பதிவை விட சற்று குறைவானதாகும். கொரோனா பரவலின் மூன்றாவது அலை ஓயத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டிலும் தினசரி கொரோனா பாதிப்பு இறங்கு முகத்தை சந்தித்து வருகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Corona Vaccine, Covid-19

    அடுத்த செய்தி