தனி பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும்: மோடி

ரஃபேல் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வருமாறு விடுத்த அழைப்பை பிரதமர் ஏற்காதது ஏன் என்று ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.

Web Desk | news18
Updated: May 18, 2019, 12:54 PM IST
தனி பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும்: மோடி
மோடி- அமித் ஷா
Web Desk | news18
Updated: May 18, 2019, 12:54 PM IST
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, முழு பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, பல்வேறு பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். எனினும், செய்தியாளர் சந்திப்புகளில் பங்கேற்றதில்லை.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் அமித் ஷா-வுடன் இணைந்து நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது பேசிய பிரதமர், இந்தத் தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்று, தனி பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளதாகவும், ஆட்சிக்கு வந்ததும், ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்ற உள்ளதாகவும் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

தலைவரின் முன்பு பேச மாட்டேன் - மோடி:

Loading...

செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்ட மோடி, இந்த செய்தியாளர் சந்திப்பை அமித் ஷா நடத்துவதாகவும், தலைவரின் முன் பேச மாட்டேன். தான் ஒழுக்கம் நிறைந்த படைவீரன் என்றும் கூறினார்.

அமித் ஷா: 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றிபெறும் என்று அனைத்து தொண்டர்களும் முழு நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணி அரசை பாஜக அமைக்கும். நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்பார் என்றார்.

 ராகுல் காந்தி: டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், தெலுங்குதேசம் ஆகிய கட்சிகள் பாஜக-வுக்கு ஆதரவு அளிக்காது என்று அவர் கூறினார். ரஃபேல் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வருமாறு விடுத்த அழைப்பை பிரதமர் ஏற்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும், மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதமர் நரேந்திர மோடி புரிந்துகொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார்.

உண்மையான நிலையை காணும் திறனை நரேந்திர மோடி இழந்துவிட்டார். உரைகளை ஆற்றுவதற்காகவோ, அவர் என்ன சிந்திக்கிறாரோ அதனை கூறுவதற்கோ பிரதமராக மக்கள் தேர்வுசெய்யவில்லை என்பதை அவர் மறந்துவிட்டார்.

உறுதியான பணிகளை மேற்கொள்வதற்காக அவரை பொறுப்பில் வைத்தனர். ஆனால், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் நிலவரம், பொருளாதாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார் ராகுல் காந்தி: ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பு சிறப்பாக இருந்ததாகவும், அடுத்த முறை அமித் ஷா தங்களை இரண்டு கேள்விகளுக்காவது பதிலளிக்க அனுமதிக்க கூடும் என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

Also see... #EXCLUSIVE மார்க்சிஸ்ட்களின் கோட்டையை உடைத்த மம்தா பானர்ஜி

Also see...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: May 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...