பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் மோடி தனது நூறாவது வயதில் காலமானார். கடந்த டிசம்பர் 28ஆம் தேதி அன்று உடல்நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 30ஆம் தேதி காலமானார்.
அவரின் இறுதிச் சடங்கை அன்று காலையே எளிதாக நடத்தி முடித்து தனது அலுவல் பணிகளை செய்தார் பிரதமர் மோடி. இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மோடியின் நினைவாக குஜராத் மாநிலத்தில் ஒரு தடுப்பணைக்கு 'ஹீராபா ஸ்மிரிதி சரோவர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் உள்ள நயாரி ஆற்றின் குறுக்கே 400 அடி நீளம், 150 அடி அகலத்தில் இந்த தடுப்பணை கட்டும் பணி நடைபெறுகிறது. இதற்கான பூமி பூஜை கடந்த 4ஆம் தேதி ராஜ்கோட் மேயர், உள்ளூர் எம்எல்ஏ முன்னிலையில் நடைபெற்றது. இந்த தடுப்பணையை கிர் கங்கா பரிவார் அறக்கட்டளை கட்டுகிறது.
இதையும் படிங்க: 'பள்ளி மதிய உணவில் இனி சிக்கன் வழங்கப்படும்..' அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மேற்கு வங்கம்!
ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்படும் இந்த புதிய தடுப்பணை 2.5 கோடி லிட்டர் தண்ணீரை சேமித்து வைக்கும் திறன் கொண்டது எனவும், இதன் மூலம் விவசாயிகள், கிராமத்தில் வசிக்கும் கால்நடை உரிமையாளர்கள் பெரிதும் பயனடைவார்கள் என அறக்கட்டளை தலைவர் திலீப் சாக்கியா கூறியுள்ளார். பிரதமரின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் அவரின் பெயர் தடுப்பணைக்கு சூட்டப்படுகிறது என அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dams, Heeraben Modi, PM Modi