செக் குடியரசு நாட்டை சேர்ந்த பிரபல யூடியூபர் டவுக் அஹூண்ட்சடா. இவர் இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வீடியோக்களை எடுத்து அதை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். அவ்வாறு இவர் கோவாவில் எடுத்த வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்தாண்டு நவம்பர் 26ஆம் தேதி கோவாவின் கலங்ஹூடி பகுதிக்கு சென்ற அவர் அங்கு வீடியோ எடுத்துள்ளார். அன்றைய தினம் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் உள்ள கடைத்தெருவில் உள்ள ஒரு கடையில் இந்த கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்த்துள்ளனர்.
அந்த கடைக்கு சென்ற யூடியூபர் உரிமையாளரை பார்த்து நீங்கள் நியூசிலாந்திற்கு ஆதரவாக இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு உரிமையாளரோ நான் பாகிஸ்தானுக்கு ஆதரவு என்றுள்ளார். ஏன் என்று யூடியூபர் பதில் கேட்கவே, அதற்கு அந்த கடையின் உரிமையாளர், இது இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி அதனால் பாகிஸ்தானுக்கு ஆதரவு தருகிறேன் என்றுள்ளார்.
கோவாவில் உள்ள கடைத்தெருவில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தருவது ஆச்சரியம் அளிக்கிறது என்று அஹூண்ட்சடா கூறி இந்த முழு சம்பவத்தை யூடியூபில் வீடியோவாக பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், அப்பகுதி மக்களின் பார்வைக்கும் இந்த வீடியோ சென்றுள்ளது. இந்நிலையில், அந்த கடையின் உரிமையாளரை அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் பிப்ரவரி 24ஆம் தேதி அன்று சிறை பிடித்து, அவரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மிரட்டினர்.
The man who was supporting Pakistan in Goa pic.twitter.com/jE8IidAf9K
— Madhur Singh (@ThePlacardGuy) February 24, 2023
மேலும், நாட்டை மதத்தின் பேரில் பிளவு படுத்த கூடாது என்று அந்த நபரிடம் ஆவசமாக கூறினர். அத்துடன் கடை உரிமையாளரை மண்டியிட வைத்து மன்னிப்பு கேட்க வைத்தனர். காதுகளில் கை வைத்து மண்டியிட்டு அந்த உரிமையாளர் மன்னிப்பு கேட்கவே, அவரை குழுமி இருந்த நபர்கள் பாரத் மாதா கி ஜெய் என்று கோஷம் எழுப்பினர். அவரையும் பாரத் மாதா கி ஜெய் கோஷம் எழுப்ப வைத்தனர். உரிமையாளரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு ஏதும் பதியப்படவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Goa, Pakistan cricket, Viral Video