கேரளாவில் கோயில் பணிகளை மேற்கொள்ள முதல்முறையாக ரோபோ யானை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள் பூஜைகளின் போது மதம் பிடித்து பாகன் மற்றும் பக்தர்களை தாக்குவது உண்டு. அத்தகைய சூழ்நிலையை தவிர்க்கும் விதமாக கேரளாவின் திருச்சூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்தில் ரோபோ யானை சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
பார்ப்பதற்கு நிஜ யானை போலவே தோன்றும் இது முழுக்க முழுக்க ELECTRONIC- மூலம் இயங்கும் ஒரு ரோபோவாகும். இரிஞ்சாடன்பிள்ளி ராமன் என்ற அழைக்கப்படும் இந்த ரோபோ யானையின் எடை 800 கிலோ ஆகும். 10 அடி உயரம் கொண்ட இந்த யானையின் மேல் 4 பேர் வரை அமரலாம் என்கின்றனர்.
யானையின் தலை, கண்கள் மற்றும் காதுகளை இயக்குவதற்கு ஐந்து மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் அதிகம் கூடும் பூஜைகளின் போது யானைகளுக்கு மதம் பிடிக்கும் வாய்ப்பு அதிகமிருப்பதால், அவ்வகையான பூஜைகளுக்கு இந்த ரோபோ யானையை பயன்படுத்தலாம் என இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களில் உள்ள கோயில்களில் யானைகள் பெருமளவில் வளர்க்கப்படுகிறது. கோயில் உற்சவங்களில் யானைகள் முக்கிய வாகனமாக இருகின்றன. அத்துடன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு யானை ஆசி வழங்கும் நடைமுறையும் வழக்கமாக உள்ளன. குறிப்பாக கேரளாவில் யானைகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அதைக் கொண்டு திருவிழாக்கள் பிரத்தியேகமாக நடைபெறும்.
இது போன்ற கோயில் யானைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்து வரும் சூழலில், இந்த சிக்கலுக்கு அறிவியல்பூர்வமாக தீர்வு காணும் வகையில் தற்போது ரோபோ யானை ஒன்று அறிமுகமாகி வரவேற்பை பெற்றுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.