Home /News /national /

சி.பி.ஐ இயக்குநர் ராஜேஷ் அஸ்தானா மீது லஞ்சம் பெற்றதாக வழக்குப்பதிவு

சி.பி.ஐ இயக்குநர் ராஜேஷ் அஸ்தானா மீது லஞ்சம் பெற்றதாக வழக்குப்பதிவு

  • News18
  • Last Updated :
    பணப்பரிவர்த்தனை முறைகேடு வழக்கின் விசாரணையிலிருந்து விடுவிப்பதற்காக ரூ.3 கோடி லஞ்சம் பெற்றதாக சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் ராஜேஷ் அஸ்தானா உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இறைச்சி ஏற்றுமதியாளரான மொயின் குரேஷி மீதான பணப்பரிவர்ததனை முறைகேட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட ஐதராபாத் தொழிலதிபர் சதீஷ் சனா பாபு அளித்த புகாரின் பேரில் ராஜேஷ் அஸ்தானா உள்ளிட்டோர் சிக்கியுள்ளனர். மொயின் குரோஷி வழக்கில் தொடர் விசாரணை அழைப்புகளால் தொல்லைக்கு ஆளான சனா பாபுவை மனோஜ் பிரசாத், சோமேஷ் பிரசாத் ஆகிய சகோதரர்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் சார்பாக அணுகியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

    5 கோடி ரூபாயை லஞ்சமாகக் கொடுத்தால் மொயின் குரோஷி வழக்கிலிருந்து சனா பாபுவை விடுவிப்பதாக அவர்கள் பேரம் பேசியுள்ளனர். 5 கோடியில் முன்பணமாக 3 கோடி ரூபாயை 5 தவணைகளில் 2017 டிசம்பர் முதல் அக்டோபர் 2018 வரையிலும் கொடுத்துள்ளதாகவும் ஆதாரங்களை சனாபாபு வழங்கியுள்ளார். இதன் பின்னரும் கடந்த மாதம் 25-ம் தேதி குடும்பத்துடன் ஐதராபாத்திலிருந்து பாரிஸ் புறப்பட்ட சனாபாபு விமான நிலையத்தில் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்ததால் தடுத்து நிறுத்தப்பட்டார்.



    அப்போது எஞ்சிய தொகையைான 2 கோடி ரூபாயை கொடுக்குமாறு சி.பி.ஐ. அதிகாரிகள் பேரம் பேசியதாக சனா பாபு குற்றம் சாட்டியுள்ளார். சனாபாபுவின் வாக்குமூலம் நீதிபதி முன்னிலையில் பதிவு செய்யப்பட்டு இதன் அடிப்படையில் சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் ராஜேஷ் அஸ்தானா, துணை கண்காணிப்பாளர் தேவேந்திர குமார் மற்றும் இடைத்தரகர்களான மனோஜ் பிரசாத், சோமேஷ் பிரசாத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ-யில், அதன் இயக்குநர் அலோக் வர்மாவுக்கு அடுத்த இடத்தில் ராகேஷ் அஸ்தனா உள்ளார். பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீதான வழக்கை விசாரிக்கும்போது அலோக் வர்மாவின் தலையீடு இருந்ததாக அமைச்சரவைச் செயலகத்தில் ராகேஷ் அஸ்தானா புகார் அளித்திருந்தார். ஆனால், 6 வழக்குகளில் ராகேஷ் அஸ்தனாவுக்கு எதிராக விசாரணை நடைபெறுவதால் அதை திசை திருப்ப தன் மீது புகார் கூறுவதாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா கூறியிருந்தார். தற்போது சிறப்பு இயக்குநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சி.பி.ஐ.யில் உள்ள அதிகார மோதல் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

    Also see...

    Published by:Saroja
    First published:

    Tags: CBI, Corruption case, Rajesh Astana

    அடுத்த செய்தி