ஹோம் /நியூஸ் /இந்தியா /

திரிபுரா பழங்குடியினர் சபை தேர்தல் : ஆளும் பாஜக கூட்டணிக்கு அதிர்ச்சி!

திரிபுரா பழங்குடியினர் சபை தேர்தல் : ஆளும் பாஜக கூட்டணிக்கு அதிர்ச்சி!

பாஜக

பாஜக

திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற பழங்குடியினர் சபை தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி சரிவை சந்தித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

திரிபுரா மாநிலத்தில் பழங்குடியினர் மாவட்ட சபை 30 இடங்களை கொண்டுள்ளது. இதில் 2 இடங்களுக்கான உறுப்பினர்களை மாநில அரசின் ஒப்புதலுடன் ஆளுநரால் நியமிக்கப்படுவதால் மீதம் உள்ள 28 இடங்களுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது.

திரிபுரா பழங்குடி பகுதிகள் தன்னாட்சி மாவட்ட சபை என்பது மாநிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு அளவுடையது. மேலும் இது திரிபுராவின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை கொண்ட பழங்குடியினரை கொண்டுள்ளது. (திரிபுராவின் மக்கள் தொகை 40 லட்சம் பேர்)

பழங்குடியினர் சபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் மொத்தம் உள்ள 28 இடங்களில் 18-ல் பிரத்யோத் மாணிக்யா தேப் பர்மனால் புதிதாக தொடங்கப்பட்ட திப்ராஹா சுதேச முற்போக்கு பிராந்திய கூட்டணி (TIPRA) கட்சி வெற்றி பெற்றது. 9 இடங்களை பாஜக - IPFT கூட்டணி கைப்பற்றியுள்ளது. ஒரு இடத்தில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த தேர்தலில் 25 இடங்களில் வெற்றி பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதற்கு முன்னதாக 20 ஆண்டுகளாக பழங்குடியினர் சபை சிபிஎம் கட்சி வசமே இருந்தது. காங்கிரஸ் கட்சியாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

பிரத்யோத் மாணிக்யா தேப் பர்மன் திரிபுரா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து பின்னர் 2019ம் ஆண்டு செப்டம்பரில் அக்கட்சியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு 2020ம் ஆண்டு புதிய கட்சியான TIPRAவை தொடங்கினார்.

பிரத்யோத் மாணிக்யா தேப் பர்மன்

இதனிடையே இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றதையடுத்து TIPRA ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டு பாஜக, சிபிஎம், IPFT மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் அலுவலங்களை சூறையாடத் தொடங்கினர். வன்முறை பற்றி எரியத் தொடங்கிய நேரத்தில் வன்முறையை கைவிடுமாறு ஆதரவாளர்களை பிரத்யோத் மாணிக்யா தேப் பர்மன் வலியுறுத்தினார்.

செய்தியாளர்களிடையே பிரத்யோத் மாணிக்யா தேப் பர்மன் பேசுகையில், “நாம் ஒற்றுமையை கடைப்பிடிக்க வேண்டும். பிற கட்சி அலுவலகங்களை தாக்க கூடாது. அவர்களும் நம் மக்கள் தான், நமக்குள்ளேயே சண்டையிட்டுக்கொள்ள கூடாது. ஒற்றுமை வேண்டுமென்றால் அமைதியை கடைபிடியுங்கள். தேர்தலுக்கு பிறகு அவர்கள் நம் கட்சியில் வந்து இணைவார்கள். வன்முறை 70 ஆண்டுகளாக நீடித்து வருகிறது, திரிபுராவாசிகள் எப்படி ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை நாடு பார்க்கட்டும்” என்றார்.

மம்தா பானர்ஜியின் ஒரு மாத சக்கர நாற்காலி பிரச்சாரம்: சாதகமா? பாதகமா?

Published by:Arun
First published:

Tags: BJP, Election 2021, Tripura