முகப்பு /செய்தி /இந்தியா / இந்தியாவில் முதல் முறையாக வாக்களிக்க பணம் கொடுத்ததாக சிட்டிங் எம்.பிக்கு சிறை தண்டனை!

இந்தியாவில் முதல் முறையாக வாக்களிக்க பணம் கொடுத்ததாக சிட்டிங் எம்.பிக்கு சிறை தண்டனை!

maloth kavitha TRS

maloth kavitha TRS

தேர்தல் சமயத்தில் மலோத் கவிதாவுக்கு வாக்களிக்க வலியுறுத்தி அவருக்கு நெருங்கியவரான சவுகத் அலி என்பவர் வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய் வீதம் பணப்பட்டுவாடா செய்த போது தேர்தல் பறக்கும் படையினரால் கையும் களவுமாக பிடிபட்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பணத்தை லஞ்சமாக கொடுத்த வாக்காளர்களை கவர்ந்ததாக எம்.பி ஒருவருக்கு இந்தியாவிலேயே முதல் முறையாக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும், வாக்களிப்பதற்காக பணம் கொடுத்து சிக்கியதாக செய்திகள் வெளிவருவதும் சகஜமான ஒன்று தான். எனினும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது வெளிவராத ரகசியமாகவே நீடிக்கும்.

இது போன்ற நிலையில் வாக்களிக்க லஞ்சம் கொடுத்து சிக்கிய வழக்கில் பெண் எம்.பி ஒருவருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தியாவிலேயே இது போன்ற வழக்கில் தண்டனை பெறும் முதல் எம்.பி என்ற பெயரையும் அவர் எடுத்திருக்கிறார்.

Also Read:   மாப்பிள்ளையின் நண்பர்கள் கொடுத்த கிஃப்டை கடுப்பில் தூக்கி வீசிய மணப்பெண்...

தெலங்கானா மாநிலத்தில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் மகாபூபாத் (Mahbubabad) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மலோத் கவிதா. தேர்தல் சமயத்தில் மலோத் கவிதாவுக்கு வாக்களிக்க வலியுறுத்தி அவருக்கு நெருங்கியவரான சவுகத் அலி என்பவர் வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய் வீதம் பணப்பட்டுவாடா செய்த போது தேர்தல் பறக்கும் படையினரால் கையும் களவுமாக பிடிபட்டார்.

மேலும் விசாரணையில் தான் மலோத் கவிதா கொடுத்த பணத்தை அவருக்கு வாக்களிப்பதற்காகத் தான் பணப்பட்டுவாடா செய்தேன் எனவும் ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சவுக்கத் அலியும் இந்த வழக்கின் விசாரணை நம்பள்ளியில் உள்ள எம்.பி - எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

Also Read:    மோசமாக கார் ஓட்டி, உயிரிழப்பு ஏற்படுத்தியதாக நடிகை யாஷிகா ஆனந்த் மீது போலீஸ் வழக்குப்பதிவு

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்போது அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளாது. அதில் குற்றச்சாட்டு நிரூபனமானதால் எம்.பி மலோத் கவிதா மற்றும் சவுக்கத் அலி என இருவருக்கும் தலா 6 மாதம் சிறை தண்டனையும், இருவருக்கும் தலா 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதே போல மேல்முறையீடு செய்வதற்கும் வாய்ப்பளிக்கும் வகையில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதன் மூலம் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்து வாக்கு பெற முயன்றதற்காக இந்தியாவிலேயே முதல் முறையாக சிட்டிங் எம்.பி ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Telangana, TRS