• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சான் பிரான்சிஸ்கோவிலிருந்து பெங்களூரு வரை பெண்களே இயக்கிய ஏர் இந்தியா விமானம்.. சாதித்த சிங்கப்பெண்கள்..

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து பெங்களூரு வரை பெண்களே இயக்கிய ஏர் இந்தியா விமானம்.. சாதித்த சிங்கப்பெண்கள்..

சான்ஃப்ரான்சிஸ்கோ முதல் பெங்களூரு வரை

சான்ஃப்ரான்சிஸ்கோ முதல் பெங்களூரு வரை

"கேப்டன் சோயா அகர்வால் 8000 மணி நேரத்திற்கும் மேலாக பறக்கும் அனுபவமும், 10 ஆண்டுகளுக்கும் மேலான B-777 aircraftல் கமெண்ட் அனுபவமும், கொண்ட ஒரு திறமையான விமானி" என்று நேஷனல் கேரியர் (national carrier) தெரிவித்துள்ளது.

  • Share this:
இந்திய பாதுகாப்பு மற்றும் வான் வழிவெளித்துறைகளின் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். இதற்கு மத்திய அரசு பல்வேறு ஊக்கங்களை வழங்கி வருகிறது. ஏற்கனவே பெண் விமானிகள் இந்திய விமானப்படையில் போர் விமானங்களை இயக்கி சாதனை படைத்து வரும் நிலையில் அடுத்த மைல் கல்லாக அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ முதல் பெங்களூரு இடையிலான ஏர் இந்தியாவின் (Air India) இடை நிறுத்தம் இல்லாத விமானத்தை இந்திய பெண் விமானிகள் இயக்கி சாதனை படைத்துள்ளனர். 

இந்த விமானம் காற்றின் வேகத்தைப் பொறுத்து சுமார் 17 மணி நேரத்திற்கும் மேலாக இருக்கும் என்று, ”ஏர் இந்தியா (Air India) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் தனது ட்விட்டரில், "பெண்களை மட்டுமே கொண்ட விமானிகள் குழு, இந்தியாவின் மிக நீண்ட விமானச் சேவை, வட துருவத்தைக் கடக்கும் விமானம். இந்த விமானச் சேவை பல சாதனைகள் மூலம் படைக்கப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளது. 

உலகின் எதிர் முனைகளான இந்த இரு நகரங்களுக்கிடையில் நேரடி தூரம் 13,993 கி.மீ ஆகும், இதன் தொலைவு 13.5 மணி நேரமாக உள்ளது என்று ஏர் இந்தியா (Air India) அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "ஏர் இந்தியாவின் பெண் சக்திகள் உலகம் முழுவதும் பறக்கிறது" என்று மத்திய சிவில் விமான அமைச்சர் ஹர்தீப் பூரி ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

"கேப்டன் சோயா அகர்வால், கேப்டன் பாபகரி தன்மாய், கேப்டன் அகன்ஷா சோனாவேர் மற்றும் கேப்டன் சிவானி மன்ஹாஸ் (Capt Zoya Aggarwal, Capt Papagari Thanmai, Capt Akansha Sonaware & Capt Shivani Manhas) ஆகியோரைக் கொண்ட அனைத்து பெண்கள் காக்பிட் குழுவினரும் (cockpit crew) சான் பிரான்சிஸ்கோ - பெங்களூரு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க விமான தொடக்கத்தை இயக்குவார்கள்" என்று அமைச்சர் கூறினார்.

கேப்டன் சோயா அகர்வால் NDTVக்கு அளித்த பேட்டியில் எங்கள் குழுவினர் வட துருவத்தின் மீது பறக்க உள்ளார்கள் இருப்பினும், அது பல காரணிகளைப் பொறுத்தது என்று அகர்வால் கூறினார். ஏர் இந்தியாவின் (Air India) "அனைத்து பெண் விமானிகள் குழுவும் வட துருவத்தின் மீது பறந்து, ஒரு நாடே பெருமை கொள்ளும் ஒரு  வரலாற்றை உருவாக்குவது இதுவே முதல் முறை. எந்தவொரு தொழில்முறை விமானிக்கும் இது கனவு நனவாகும் நாள்" என்று அவர் ANI இடம் கூறினார்.

Flight AI176 அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு (உள்ளூர் நேரம்) புறப்பட்டு திங்கள்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு (உள்ளூர் நேரம்) பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும். 

"கேப்டன் சோயா அகர்வால் 8000 மணி நேரத்திற்கும் மேலாக பறக்கும் அனுபவமும், 10 ஆண்டுகளுக்கும் மேலான B-777 aircraftல் கமெண்ட் அனுபவமும், கொண்ட ஒரு திறமையான விமானி" என்று நேஷனல் கேரியர் (national carrier) தெரிவித்துள்ளது. சமீபத்தில் பகிரப்பட்ட மற்றொரு ட்வீட்டில், ஏர் இந்தியா குழுவினர் விமானத்தின் தளவாடங்கள் (logistics of the flight) குறித்து விவாதிப்பதைக் காணலாம்.

இந்த விமானம் Boeing 777-200LR aircraft VT ALG உடன் 8 பர்ஸ்ட் கிளாஸ், 35 பிசினஸ் கிளாஸ், 195 எகனாமி கிளாஸ் உள்ளமைவு மற்றும் நான்கு காக்பிட் (cockpit) மற்றும் 12 கேபின் குழுவினர் (cabin crew) உட்பட 238 நபர்கள் அமரக்கூடிய திறன் கொண்டது என்று ஏர் இந்தியா (Air India) தெரிவித்துள்ளது. பொதுவாக இந்த நீண்ட பயணத்தை பனிபடர்ந்த வட துருவத்தின் வழியாகவே கடக்க வேண்டும். 

இது போன்ற சவால் நிறைந்த உலகின் நீண்ட தூரத்தை கடப்பதற்கு அதிகப்படியான திறமையும், அனுபவமும் அதோடு தொழில்நுட்பத்தை நன்றாக பயன்படுத்தக் கூடிய விமானிகளால் மட்டுமே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது இது பெண் சக்திகளாலும் முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Gunavathy
First published: