ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா திடீர் ராஜினாமா!

மத்திய அரசுக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிணக்கு காரணமாக ராஜினாமா முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், சொந்த காரணத்திற்காக விலகுவதாக உர்ஜித் படேல் கூறியிருந்தார்.

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா திடீர் ராஜினாமா!
விரால் ஆச்சார்யா
  • News18
  • Last Updated: June 24, 2019, 12:54 PM IST
  • Share this:
ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சர்யா திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

விரால் ஆச்சர்யா,  ரிசர்வ் வங்கியின் 4 துணை ஆளுநர்களில் ஒருவராக,  2017-ம் ஆண்டு ஜூன் மாதம் பொறுப்பேற்றார். பதவிக் காலம் முடிவதற்கு இன்னும்  6 மாதங்கள் உள்ள நிலையில்,  திடீரென்று அவர் ராஜினாமா செய்துள்ளார்.

கல்விப் பணியில் ஈடுபட இருப்பதால் பதவி விலகியதாக கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் பட்டேல் சில மாதங்களுக்கு முன் ராஜினாமா செய்தார்.

மத்திய அரசுக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிணக்கு காரணமாக ராஜினாமா முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், சொந்த காரணத்திற்காக விலகுவதாக உர்ஜித் படேல் கூறியிருந்தார்.

அவரைத் தொடர்ந்து விரல் ஆச்சர்யாவும் அப்போதே ராஜினாமா செய்வார் என கூறப்பட்டது. அதனை ரிசர்வ் வங்கி மறுத்திருந்த நிலையில், தற்போது ராஜினாமா செய்துள்ளார்.

Also see...

Loading...

First published: June 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...