வரலாறு காணாத கடும் மழையால் மும்பையில் 19 பேர் பலி!

பலியானோர் குடும்பங்களுக்கு மஹாராஷ்டிரா அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வரலாறு காணாத கடும் மழையால் மும்பையில் 19 பேர் பலி!
மும்பை மழை
  • News18
  • Last Updated: July 2, 2019, 5:55 PM IST
  • Share this:
கடந்த 24 மணி நேரமாக மும்பையில் பெய்து வரும் கடும் மழையால் இதுவரை 19 பேர் பலியாகி உள்ளனர்.

கடுமையான மழையால் மும்பையில் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் முடங்கி நாட்டின் வணிகத் தலைநகரமே தவித்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்துக்கு மழைப்பொழிவு இன்னும் கடுமையானதாக மாறும் என மும்பை நகருக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

மும்பை மாநகரம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு மற்றும் பாதுகாப்புப் பணிக்காக இந்திய கடற்படையினர் களம் இறக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மும்பை நகரில் மட்டும் 52 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 54 விமானங்கள் மோசமான வானிலை காரணமாக திருப்பிவிடப்பட்டன.


மழையின் காரணமாக மும்பை நகருக்கு மஹாராஷ்டிரா அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்திலும் கட்டட இடிபாடுகளிலும் சிக்கி குழந்தைகள் உட்பட இதுவரையில் 19 பேர் பலியாகி உள்ளனர். பலியானோர் குடும்பங்களுக்கு மஹாராஷ்டிரா அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

மேலும் பார்க்க: நாடு கடத்தப்படுவாரா விஜய் மல்லையா?- மேல்முறையீட்டுக்கு அனுமதி கிடைக்குமா?
First published: July 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading