அகில இந்திய காவல்துறை தலைவர்கள் (டிஜிபி/ஐஜிபி) பங்கேற்கும் 3 நாள் மாநாடு நேற்று டெல்லியில் தொடங்கியது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த காவல்துறை தலைவர்கள், மத்திய ஆயுதப் படைகளின் தலைவர்கள், மத்திய காவல் அமைப்புகளின் தலைவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் நேரடியாகவும் காணொளி வாயிலாகவும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று உரையாற்றினர். தனது பேச்சில் அவர் நாட்டின் பாதுகாப்பு, காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகள் குறித்து முக்கிய தகவல்களை தெரிவித்தார். அமித் ஷா தனது உரையில் கூறியதாவது, "ஜம்மு காஷ்மீரில் தற்போது பயங்கரவாத செயல்பாடுகள், அது சார்ந்த உயிரிழப்புகள், பயங்கரவாதிகளின் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இன்று ஜம்மு காஷ்மீர் மெல்ல இயல்பான சூழலை நோக்கி நகர்ந்து வருகிறது. 2022ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1.8 கோடி பேர் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா வந்துள்ளனர். இது வரலாற்று சாதனை ஆகும். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கான முதலீடு கடந்த 4 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீருக்கு வந்துள்ளது.
ஒரு காலத்தில் ஜம்மு காஷ்மீரில் இருக்கும் குழந்தைகள் நாட்டின் வேறு பகுதிக்கு சென்று கல்வி பயில வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு 32,000 மாணவர்கள் படிக்க வந்துள்ளனர். வடகிழக்கு மாநநிலங்களிலும் கடந்த மூன்று ஆண்டுகளில் வன்முறை 42 சதவீதம் குறைந்துள்ளது.அங்கு சிறப்பு ஆயுதப்படை சட்டம் 30 சதவீத பகுதிகளில் நீக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீது பாலியல் புகார் - பி.டி.உஷா தலைமையில் அவசர ஆலோசனை..
9,000க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்துள்ளனர். 2010ஆம் ஆண்டில் இடதுசாரி பயங்கரவாத பாதிப்பு கொண்ட மாவட்டங்கள் இந்தியாவில் 96 இருந்தன. தற்போது அது 46ஆக குறைந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் 3 பிராந்தியங்களில் எல்லை பிரச்சனைகள் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கப்பட்டுள்ளன. மீதி நான்கு பிரச்சனைகளையும் நடப்பு ஆண்டில் பேசி தீர்ப்போம்." இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்வில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினரை அமித் ஷா பாராட்டி கோப்பைகளை வழங்கி கவுரவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Amit Shah, Home Minister Amit shah, Jammu and Kashmir, Police