• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மகன் ஆர்யனை கைது செய்த NCB அதிகாரி ஷாருக்கானை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியவர் - எதற்கு?

மகன் ஆர்யனை கைது செய்த NCB அதிகாரி ஷாருக்கானை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியவர் - எதற்கு?

Shah rukh khan

Shah rukh khan

மும்பை விமான நிலைய சுங்க இலாகாவின் துணை கமிஷனராக இருந்த சமீர் வான்கடேவின் டீம்,ஷாருக் கானிடம் விசாரணை நடத்தியது.

  • Share this:
சொகுசுப் கப்பலில் போதைப் பொருள் வைத்திருந்ததாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான், உள்ளிட்டவர்களை போதைப் பொருள் தடுப்பு முகமையின் (NCB) மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் கைதான ஆர்யன் கான் தற்போது மும்பையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆர்யன் கான் கைது, பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவரை கைது செய்த NCB மண்டல இயக்குனர் சமீர் வான்கடே மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. சமீர் வான்கடே பணம் பறிக்கும் நோக்கில் போலியாக போதைப் பொருள் வழக்கை பதிவு செய்திருப்பதாகவும் சில குற்றச்சாட்டுகள் உள்ளன.

அதே நேரத்தில் சமீர் வான்கடே பிரபலம் ஒருவர் மீது கடுமையாக நடந்து கொண்டிருப்பது இது முதல் முறை கிடையாது. ஆர்யன் கானின் தந்தை ஷாருக் கானிடமே கடுமை காட்டியிருக்கிறார். 2011ம் ஆண்டு மும்பை விமான நிலையத்தில், ஆர்யன் கானின் தந்தையான பாலிவுட் உச்ச நட்சத்திரம் ஷாருக் கானை தடுத்து நிறுத்தி, அவருக்கு அபராதம் விதித்தவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மேலும் ஷாருக் கான் மட்டுமல்லாது, அனுஷ்கா சர்மா, கத்ரினா கைஃப் போன்றோரையும் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்திருப்பவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Also read: தன்னைவிட 13 வயது குறைந்த ஆட்டோ டிரைவருடன் மாயமான கோடீஸ்வரரின் மனைவி..

சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் 2011ம் ஆண்டு, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், தனது குடும்பத்துடன் இங்கிலாந்து மற்றும் ஹாலந்து போன்ற நாடுகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டு மும்பை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவரிடம் 20 லக்கேஜ்கள் இருந்தன. அந்த சமயம் மும்பை விமான நிலைய சுங்க இலாகாவின் துணை கமிஷனராக இருந்த சமீர் வான்கடேவின் டீம், இது குறித்து ஷாருக் கானிடம் விசாரணை நடத்தியது. மேலும் 20 லக்கேஜ்கள் இருந்ததால், அதில் வெளிநாட்டில் இருந்து வரி செலுத்தக் கூடியவகையிலான பொருட்கள் இருக்கக் கூடும் என சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர். மேலும் விஐபி என கருதாமல் அவரிடம் பல மணி நேரம் விசாரணையும் நடத்தியிருக்கின்றனர்.

பின்னர், ஷாருக் கான் தனது லக்கேஜ்களில் விலைமதிப்பான பொருட்கள் வரி செலுத்தாமல் கொண்டுவந்திருந்தது தெரியவந்தது. பின்னர் அவருக்கு ஒன்றரை லட்ச ரூபாயை அபராதமாக விதித்தவர் இதே சமீர் வான்கடே தான்.

Also read:  டிவி லைவ் ஷோவில் சோயிப் அக்தரை வெளியேற சொன்ன நெறியாளர் – வைரல் வீடியோ!

சமீர் வான்கடே விமான நிலைய சுங்க இலாகாவின் தலைவராக இருந்த சமயத்தில் பாலிவுட் நட்சத்திரமும் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா, அனுராக் காஷ்யப், பிபாஷா பாசு, மினிஷா லம்பா, கத்ரினா கைஃப், ரன்பீர் கபூர், விவேக் ஓபராய், மிகா சிங், ரியா சக்கர்போர்த்தி, தீபிகா படுகோனே, சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் என நட்சத்திர பட்டாளமே சமீரின் கடுமைக்கு ஆளாகியுள்ளனர்.

சமீர் வான்கடே கடுமையான அதிகாரி என பெயரெடுத்த போதிலும், அவர் மீதே சில குற்றச்சாட்டுகள் உள்ளன. தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிர மாநில அமைச்சருமான நவாப் மாலிக், சமீர் வான்கடே போலியாக சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளார் என குற்றச்சாட்டு கூறியிருக்கிறார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: