முகப்பு /செய்தி /இந்தியா / பாகிஸ்தானுடன் சேரலாம் இல்லனா தனி நாடாகலாம்: காஷ்மீர் மக்களுக்கு இம்ரான் கானின் புதிய ஆஃபர்!

பாகிஸ்தானுடன் சேரலாம் இல்லனா தனி நாடாகலாம்: காஷ்மீர் மக்களுக்கு இம்ரான் கானின் புதிய ஆஃபர்!

இம்ரான் கான்

இம்ரான் கான்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை பொருத்தவரையில் தனது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்திருக்கிறது. காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்தது, இருக்கிறது, எதிர்காலத்திலும் இருக்கும் என்பதே அது.

  • Last Updated :

பாகிஸ்தானுடன் இணையலாமா அல்லது தனி நாடாகலாமா என பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் வாக்கெடுப்பின் மூலம் முடிவு செய்து கொள்ளலாம் என பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நாளை (ஜூலை 25) தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 18ம் தேதி அங்குள்ள டரார் கால் பகுதிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் -  காஷ்மீர் இணைப்பு குறித்து பேசியுள்ளார்.

பாகிஸ்தானின் பிரதான எதிர்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் பிரிவின் தலைவரான மரியம் நவாஸ் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில், காஷ்மீரின் தற்போதைய நிலைப்பாட்டை மாற்றியமைத்து, காஷ்மீரை பாகிஸ்தானின் ஒரு மாநிலமாக்க பாகிஸ்தான் அரசு முயற்சித்து வருவதாக கூறினார். இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

Also Read:   மணமேடையில் மாப்பிள்ளை செய்த செயலால்... நெட்டிசன்கள் கொந்தளிப்பு

எதிர்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பிரதமர் இம்ரான் கான், “இது போன்ற யூகம் எங்கிருந்து எழுந்தது என தெரியவில்லை. அது போன்ற திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை. ஐநா சபையின் தீர்மானங்களின்படி, காஷ்மீரிக்கள் தங்களின் எதிர்காலத்தை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு மூலம் வாய்ப்பு வழங்கப்படும், அந்த நாளில் காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானுடன் இணைவார்கள் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.

காஷ்மீர் தொடர்பான பாகிஸ்தானின் அறிவிக்கப்பட்ட கொள்கையின்படி, ஐ.நா. தீர்மானத்தின் படி காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானையோ அல்லது இந்தியாவையோ தேர்வு செய்ய அனுமதிக்கும் வாக்கெடுப்பு மூலம் தீர்க்கப்பட வேண்டும். காஷ்மீர் பாகிஸ்தானுடனோ, இந்தியாவுடனோ சேரலாம் அல்லது தனி பிரதேசமாகலாம், என அவர் தெரிவித்தார்.

Also Read:  செல்லப்பிராணியால் பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. நினைத்துக்கூட பார்க்க முடியாத துயரம் இது..!

ஐ.நாவின் காஷ்மீர் தீர்மானத்தின்படி 3வது வாய்ப்பு என்பது கிடையாது, ஆனால் காஷ்மீர் தனி மாநிலம் அல்லது பிரதேசம் ஆகலாம் என இம்ரான் கான் பேசியிருக்கிறார்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை பொருத்தவரையில் தனது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்திருக்கிறது. காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்தது, இருக்கிறது, எதிர்காலத்திலும் இருக்கும் என்பதே அது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos

    இதுவரை காஷ்மீர் பிரச்னையால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 4 போர்கள் நடைபெற்றுள்ளன. அதே போல சர்வதேச அளவில் காஷ்மீர் பிரச்னையை எடுத்துச் செல்ல முயன்ற இம்ரான் கானின் முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Imran khan, India and Pakistan, Kashmir