பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்துவந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் அவரது ஆதரவு எம்பிக்கள் அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்றனர். இதையடுத்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்து இம்ரான் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து புதிய பிரதமராக பிரதான எதிர்க்கட்சிகள் ஷெபாஸ் ஷெரிப் தேர்வானார். சர்வதேச சதி காரணமாக தனது ஆட்சி பறிபோனது, மக்களின் ஆதரவோடு நான் மீண்டும் ஆட்சி அமைப்பேன் என சூளுரைத்த இம்ரான் கான் தொடர் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று மக்கள் ஆதரவை திரட்டி வருகிறார்.
இம்ரான் கானின் பாகிஸ்தான் தெரிக் இ இன்சாப் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் லாகூரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய அரசின் வெளியுறவு கொள்கையை பாராட்டிய இம்ரான் கான், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் பேசிய வீடியோவை ஒளிபரப்பி காட்டியுள்ளார்.
உக்ரைன் மீதான போரைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் உலக நாடுகள் எண்ணெய் வாங்கக் கூடாது என அமெரிக்கா வலியுறுத்தி அழுத்தம் தந்து வருகிறது. ஆனால், பிற நாடுகளின் அழுத்தங்களை பொருட்படுத்தாமல் இந்தியா தனது நலனுக்கு ஏற்ப தான் செயல்படும் என ஜெய்சங்கர் அந்த கருத்தரங்கில் கூறினார். இதை ஒளிபரப்பி மேற்கோள்காட்டி பேசிய இம்ரான் கான், "இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நேரத்தில் தான் விடுதலை பெற்றன. ஆனால், இந்தியா தனது வெளியுறவு கொள்கையில் உறுதியாக நிற்கும் போது பாகிஸ்தான் அரசால் ஏன் அவ்வாறு நிற்க முடியவில்லை.
இதையும் படிங்க: வேறு பெண்ணுடன் தொடர்பு... காதலனை பழிவாங்க முழு பக்க விளம்பரம் தந்த பெண்
சுதந்திர நாடு என்றால் இந்தியா போன்று முடிவெடுத்து தான் செயல்பட வேண்டும். ஆனால் பாகிஸ்தானிலோ நிலைமை தலைகீழாக நடக்கிறது" என இந்திய அரசை பாராட்டியும் பாகிஸ்தான் அரசை விமர்சித்தும் பேசியுள்ளார். தனது பிரதமர் பதவி பறிபோனதற்கு அமெரிக்காவின் சதியே காரணம் என இம்ரான் கான் கூறிவந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: External Minister jaishankar, Imran khan, India and Pakistan