முகப்பு /செய்தி /இந்தியா / ”இணைந்து பயணிக்க எதிர்நோக்கியுள்ளேன்” பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து

”இணைந்து பயணிக்க எதிர்நோக்கியுள்ளேன்” பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து

இம்ரான் கான் உடன் பிரதமர் மோடி (கோப்புப்படம்)

இம்ரான் கான் உடன் பிரதமர் மோடி (கோப்புப்படம்)

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

மக்களவை தேர்தலில் அபார வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 345 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இதனால், பிரதமர் மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பதவியேற்க இருக்கிறார். பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்த நாடான பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான், மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு தேர்தல் வெற்றிக்கான எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தெற்காசியாவின் அமைதி, வளம், வளர்ச்சிக்காக அவருடன் பயணிக்க எதிர்நோக்கியுள்ளேன்” என்று இம்ரான் கான் கூறியுள்ளார்.

First published:

Tags: Lok Sabha Election 2019, PM Imran Khan, PM Modi