ஹோம் /நியூஸ் /இந்தியா /

மனைவியின் காதலர் செல்போன் தகவல்களை கேட்ட நபர் - நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

மனைவியின் காதலர் செல்போன் தகவல்களை கேட்ட நபர் - நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

கர்நாடக உயர்நீதிமன்றம்

கர்நாடக உயர்நீதிமன்றம்

அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தனது மனைவியின் காதலராக அவர் கருதும் நபரின் செல்போன் தகவல்களை வழங்க உத்தரவிட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

கடந்த 2018 ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த பெண் தனது கணவர் கொடுமைப்படுத்துவதாக விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அவரது கணவரும் தனது மனைவி வேறு ஒருவருடன் உறவில் இருப்பதாகவும் அதனை நிரூபிக்க மனைவியின் செல்போன் தகவல்கள் தனக்கு கிடைக்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் கேட்டார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தனது மனைவியின் காதலராக அவர் கருதும் நபரின் செல்போன் தகவல்களை வழங்க உத்தரவிட்டது.

Also Read : மனைவி தொடர்ந்து சண்டை போட்டு கொண்டே இருந்ததால் புதுமாப்பிள்ளை தற்கொலை

இதனை எதிர்த்து பெண்ணின் காதலர்  கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, மனைவியின் தவறான உறவை நிரூபிக்க மற்றொரு நபரின் செல்போன் தகவல்கள் பெறுவதை அனுமதிக்க முடியாது. இது தனிநபரின் உரிமையை மீறுவது என்று கூறி மனுதாரரின் செல்போன் தகவல்களை வழங்க குடும்ப நல நீதிமன்ற வழங்கிய உத்தரவை ரத்து செய்தார்.

First published:

Tags: HighCourt, Karnataka