ஹோம் /நியூஸ் /இந்தியா /

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்குத் தடை - என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும்?

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்குத் தடை - என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும்?

டிக்டாக்

டிக்டாக்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

டிக்-டாக், ஷேர்-இட் உள்ளிட்ட 59 வகையான சீன மொபைல் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதைப் பார்க்கலாம். 

2000-ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டம் 69 ஏ பிரிவின்படி, எந்தவொரு கணினி வளத்தின் வாயிலாக பொதுமக்கள் அணுகும் தகவல்களை தடை செய்ய அதிகாரம் உள்ளது. இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளிநாட்டு நட்புறவு ஆகியவற்றை பாதுகாக்கவும், அதுதொடர்பான குற்றங்களை தடுக்கவும், ஆன்லைனில் தகவல்களை வழங்கும் நிறுவனங்களை மத்திய அரசு தடை செய்யலாம்.

பயனாளர்களின் தகவல்கள் அவர்களுக்கே தெரியாமல் இந்தியாவிற்கு வெளியே பகிரப்படுவதாக கிடைத்த தொடர் புகார்களை அடுத்து இந்த 59 சீன செயலிகளை தடை செய்ததாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

பயனாளர்களுக்கு தடை தொடர்பான அறிவிப்பு, இணைய சேவை வழங்கும் மொபைல் நெட்வொர்க்குகளிடம் இருந்து விரைவில் வர வாய்ப்புள்ளது. அப்போது அந்த குறிப்பிட செயலிகளை திறந்தால், அரசு உத்தரவின்பேரில் அனுமதி தடை செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி திரையில் மிளிரும்.

59 செயலிகளும் கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஏற்கெனவே பதிவிறக்கம் செய்தவர்கள் இணைய சேவை பயன்பாடு தேவையில்லாத செயலிகளை தொடர்ந்து பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

இந்தியாவில் 10 கோடி டிக்டாக் பயனாளர்கள் உள்ளனர். ஹலோ, லைக், பிகோ லைவ் வீடியோ சேட் ஆப் போன்ற செயலிகள் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தருகின்றன. பயனாளர்கள் டிக்டாக்கிற்கு மாற்றாக சிங்காரி, மற்றும் இதர செயலிகளுக்கும் மாற்று செயலிகளை நாடிச் செல்லும் நிலை உள்ளது.

மத்திய அரசு உத்தரவைத் தொடர்ந்து டிக்டாக் ஆப் செயல்பாடு நிறுத்தம்: இணையதளமும் முடக்கியது

தடை செய்யப்பட்ட செயலிகளின் நிறுவனங்களுக்கு இந்தியாவில் அலுவலகங்கள் உள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிக்டாக் செயலியை சென்னை உயர்நீதிமன்றம் தடை செய்தாலும், சில நாட்களில் தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.  ஆனால் தற்போது, தேசிய பாதுகாப்பை கருதி 59 சீன செயலிக்கு தடை விதிக்கப்பட்டது மிகப்பெரிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

First published:

Tags: TikTok