ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால் ஏழை மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தினந்தோறும் கிடைக்கும் வருமானத்தை மட்டுமே நம்பி வாழும் ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம், முற்றிலும் சிதைந்துள்ளதாகவும், உடனடியாக அவர்களுடைய வங்கிக் கணக்குகளுக்குப் பணம் போடப்பட வேண்டும் எனவும், இருப்பிடம் அமைத்துக் கொடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் ஊரடங்கால் நாடு முழுவதும் அச்சமும், குழப்பமும் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு, கொரோனா உயிரிழப்புகளை மேலும் அதிகப்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளார்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.