முகப்பு /செய்தி /இந்தியா / ‘POKவை காலி பன்னுங்க’: ஐ.நா மன்றத்தில் பாகிஸ்தான் பிரதமரை கிழித்து தொங்கவிட்ட இந்திய பெண் அதிகாரி!

‘POKவை காலி பன்னுங்க’: ஐ.நா மன்றத்தில் பாகிஸ்தான் பிரதமரை கிழித்து தொங்கவிட்ட இந்திய பெண் அதிகாரி!

sneha dubey

sneha dubey

பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள அனைத்து பகுதிகளையும் உடனடியாக வெளியேறுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஐ.நா மன்றத்தில் பாகிஸ்தான் பிரதமரை கிழித்து தொங்கவிட்ட இந்திய பெண் அதிகாரி - குவியும் பாராட்டு!ஐக்கிய நாடுகள் சபையில் 76வது பொது கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் இந்திய பெண் வெளியுறவுத்துறை அதிகாரி ஸ்நேகா துபே.

ஐ.நா பொது சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேரடியாக கலந்து கொள்ளாத நிலையில், விர்சுவல் முறையில் உரை நிகழ்த்தியிருக்கிறார். தனது உரையில் காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்தும், பிரிவினைவாத தலைவர் அலி ஷா கிலானி குறித்தும் இந்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும் அவர் விமர்சித்து பேசியிருந்தார்.

இம்ரான் கானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விளக்கம் அளித்த இந்தியா சார்பில் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் அதிகாரியான ஸ்நேகா துபே பேசுகையில், “காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்தது, இருக்கிறது, இனியும் இருக்கும். இதில் பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்த பகுதிகளும் அடங்கும். பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள அனைத்து பகுதிகளையும் உடனடியாக வெளியேறுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்

ஐ.நா மன்றத்தில் பிரதமர் இம்ரான் கானின் பேச்சு தவறானது மற்றும் தீங்கிழைக்கும் வகையிலானது. சர்வதேச மேடைகளை தவறாக பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக தவறான பிரச்சாரத்தை மேற்கொள்ள இம்ரான் கான் தொடர்ந்து முயன்று வருகிறார். இதன் மூலம் அவர்கள் நாட்டில் மக்கள் படும் துன்பங்களை திசை திருப்ப அவர் முயல்கிறார். ஒரு பக்கம் பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் ஹாயாக உலாவுகின்றனர்., ஒரு "தீயணைப்பவர்" போல மாறுவேடமிட்டு "தீ வைப்பவராக" விளங்குகிறது பாகிஸ்தான்.

Also Read: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை விளாசிய தாலிபான்கள்!

பயங்கரவாதிகளை வெளிப்படையாக ஆதரித்தல், பயிற்சி அளித்தல் மற்றும் நிதியளித்தல் மற்றும் ஆயுதங்களை வழங்குதல் போன்றவை பாகிஸ்தானில் நடைபெறுவது சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கொல்லைப்புறமாக தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதால் அந்நாட்டின் கொள்கைகளால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களை உலக அரங்கில் விமர்சித்து பொய் பரப்புரையை பாகிஸ்தான் மீண்டும் ஒரு முறை பரப்ப முயற்சிக்கிறது.” இவ்வாறு ஸ்நேகா துபே அதிரடியாக பேசினார்.

Also Read:   டாடா தயாரித்து வழங்கும் Airbus C295 ரக ஏர் லிஃப்டர் விமானங்களின் சிறப்புகள்!

யார் இந்த ஸ்நேகா துபே?

ஸ்நேகா துபே, 2012 பேட்ச் ஐஎப்எஸ் அதிகாரியாவார். பள்ளிப்படிப்பை கோவா மற்றும் புனேவிலும், உயர்கல்வியை டெல்லி பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். தனது 12 வயதில் இருந்தே ஐஎப்எஸ் அதிகாரி ஆவதை லட்சியமாக கொண்டிருந்தார். தற்போது ஐ.நாவின் இந்தியாவுக்கான முதல் செயலாளராக ஸ்நேகா பணியாற்றி வருகிறார்.

ஸ்நேகாவின் பதிலடி உரை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி இந்தியர்களின் பாராட்டை பெற்று வருகிறது.

First published:

Tags: Imran khan, Kashmir, News On Instagram, United Nation