இந்தியாவில் ஜி.எஸ்.டி வசூல் குறைவுக்குக் காரணம் என்ன? - சர்வதேச நிதியம் விளக்கம்

இந்தியாவில் ஜி.எஸ்.டி வசூல் குறைவுக்குக் காரணம் என்ன? - சர்வதேச நிதியம் விளக்கம்
IMF (Reuters)
  • News18
  • Last Updated: February 18, 2020, 11:28 AM IST
  • Share this:
சரக்கு மற்றும் சேவை வரியாக இந்தியாவில் வசூல் செய்யப்படுவது, அதன் முழு திறனையும் ஒப்பிடும் போது மிகவும் குறைவான அளவில் உள்ளது என்று சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.

2018-19-ஆம் ஆண்டில் இந்தியாவில் வசூலான சரக்கு மற்றும் சேவை வரி விகிதம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.2% வளர்ச்சி அடையும் திறன் இருந்தும், 5.8% மட்டுமே வசூலாகி இருப்பதாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது

மற்ற வளரும் நாடுகளில் ஜி.எஸ்.டி வரி விகிதங்கள் குறைவாக உள்ள நிலையில், இந்தியாவில், 5%, 12%, 18% மற்றும் 28% என பல கட்ட வரிகள் இருப்பதை நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. தங்கம், ரியல் எஸ்டேட் துறைக்கு என தனித்தனி வரி வரம்புகள் இருப்பதும்; கார், புகையிலை பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் மீது கூடுதல் செஸ் வரி விதிப்பதும் இந்தியாவின் வரி வசூல் குறைய முக்கியக் காரணம் என கூறியுள்ளது.


அத்தோடு, வரி தாக்கல் செய்யும் நடைமுறைகளில் உள்ள சிக்கல்களும் ஜி.எஸ்.டி வசூல் குறைய காரணம் என்று கூறியுள்ளது. உதாரணமாக, துருக்கி மற்றும் ரஷ்யாவில் 18% என்ற ஜிஎஸ்டி வரம்பு மட்டுமே உள்ள நிலையில், ஜி.எஸ்.டியின் வசூல் என்பது துருக்கியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8%, ரஷ்யாவில் 5.7% இருப்பதாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. பிரேசிலில் 17 முதல் 20% வரை ஜி.எஸ்.டி விதிக்கப்படும் நிலையில், அதன் உள்நாட்டு உற்பத்தியில் ஜி.எஸ்.டி வசூல் 7.1% இருப்பதாகவும்; சீனாவில் 17% என்று ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் நிலையில், அதன் உள்நாட்டு உற்பத்தியில், ஜி.எஸ்.டி வசூல் 5.5% உள்ளது என சர்வதேச நிதியம் கூறியுள்ளது.

இந்தோனேசியாவில் ஜி.எஸ்.டி வசூல் என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5%, தென் ஆப்ரிகாவில் 6.4% இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஒரு பொருளை BRANDING செய்தால், ஒரு வரி, அதே பொருளை BRANDING இல்லாமல் விற்பனை செய்தால் வரியில்லை என்ற நடைமுறையால், பலரும், தங்கள் பொருட்களை BRANDING செய்யாமல் விற்பனை செய்வதாக சர்வதேச நிதியம் சொல்கிறது. இதுவும் ஜி.எஸ்.டி வரி குறையக் காரணம் என்று சர்வதேச நிதியம் சுட்டிக்காட்டியிருக்கிறதுஜி.எஸ்.டி ரீஃபண்ட் வழங்குவதில் உள்ள சிக்கல் போன்ற அடிப்படை கட்டமைப்பில் ஏற்பட்டிருக்கக் கூடிய சில பிரச்னைகளும் குறைவாக ஜி.எஸ்.டி வரி வசூலாக முக்கியக் காரணங்களாக சர்வதேச நிதியம் கூறியுள்ளது

Also see:

 

 
First published: February 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்