முகப்பு /செய்தி /இந்தியா / கொரோனாவில் இருந்து மீண்டு வலுவான பொருளாதாரமாக இந்தியா முன்னேற்றம் - IMF இயக்குனர் பாராட்டு

கொரோனாவில் இருந்து மீண்டு வலுவான பொருளாதாரமாக இந்தியா முன்னேற்றம் - IMF இயக்குனர் பாராட்டு

பிரதமர் மோடியுடன் ஐஎம்எப் இயக்குனர் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் ஐஎம்எப் இயக்குனர் சந்திப்பு

பெருந்தொற்று காலத்தில் இந்தியா இடர்களை சந்தித்தாலும், அதில் இருந்து இந்தியா மீண்டு வலுவான பொருளாதார சக்தியாக இந்தியா முன்னேறி வருகிறது என ஐஎம்எஃப் நிர்வாக இயக்குனர் பிரதமர் மோடியை பாராட்டியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

உலகின் முன்னணி நிதி அமைப்பான சர்வதேச நாணய நிதியம் (IMF - International Monetary Fund) அமைப்பின் நிர்வாக இயக்குனர் கிரிஸ்டாலினா ஜார்ஜிவா இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த அவர், உலக பொருளதார நிலவரம் மற்றும் சர்வதேச அரசியல் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் ஆகியவை குறித்து விவாதித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து இரு தலைவர்களும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் உணவு மற்றும் எரிபொருள்களின் தேவை மற்றும் தட்டுப்பாடு காரணமாக விலைவாசி உயர்வு வேகமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாடுகள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றனர்.

பின்னர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய கிரிஸ்டாலினா இந்த சந்திப்பு குறித்து ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், "பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. பெருந்தொற்று காலத்தில் இந்தியா இடர்களை சந்தித்தாலும், அதில் இருந்து இந்தியா மீண்டு வலுவான பொருளாதார சக்தியாக இந்தியா முன்னேறி வருகிறது. அதற்கு வாழ்த்துகள்" என்றார்.

இதையும் படிங்க: தென் மாநிலங்களில் பெண்களுக்கு உடல் பருமன் பிரச்சனை தீவிரமாக அதிகரிப்பு; ஆய்வில் தமிழகத்திற்கு எச்சரிக்கை

இந்தியாவில் உருவாகியுள்ள டிஜிட்டல் கட்டமைப்பு தான் இந்தியாவின் நிதி ஸ்திரத்தன்மையை காத்துள்ளது என்றுள்ளார். ஜி 20 நாடுகளின் தலைமை பொறுப்புக்கான தேர்தல் விரைவில் வரவுள்ளது.

தலைமை பொறுப்புக்கு போட்டியிட்டு அதற்கான ஆதரவை திரட்டி வருகிறது. இந்த சூழலில் ஐஎம்எஃப் இந்தியாவுக்கு ஆதரவு தரும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. அதை உறுதி செய்யும் விதமாக இந்தியாவையும் பிரதமர் மோடியையும் பாராட்டி சென்றுள்ளார்.

First published:

Tags: IMF, Indian economy, Nirmala Sitharaman, PM Modi